twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி

    By Siva
    |

    Recommended Video

    சர்கார் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி- வீடியோ

    சென்னை: சர்கார் பட போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் போஸ்டரில் தளபதி சிகரெட் பிடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அந்த போஸ்டரை பார்த்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்.

    Sarkar poster issue: Vijay Sethupathi supports Vijay

    இந்நிலையில் போஸ்டர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து படத் தயாரிப்பு தரப்பில் அந்த போஸ்டரை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்கள்.

    இந்த பிரச்சனை குறித்து முருகதாஸோ, விஜய்யோ இதுவரை எதுவும் பேசவில்லை. நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தான் விஜய்க்கு ஆதரவாக பேட்டி அளித்தார். முதலில் புகையிலையை தடை செய்யட்டும் என்றார்.

    இந்நிலையில் சர்கார் போஸ்டர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்காக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்கு மாறாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது தானே என்றார்.

    English summary
    Actor cum producer Vijay Sethupathi said that instead of pointing fingers at actors who act in smoking scene it will be good to question the company that produce cigarettes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X