சர்கார்: சன் பிக்சர்ஸ் ஏன் கடைசி நேரத்தில் இப்படி செய்துவிட்டது?
Recommended Video

சென்னை: அமெரிக்காவில் இன்றே சர்கார் படத்தின் ப்ரீமியர் காட்சிகள் வெளியிடப்படுவதால் திருட்டு வீடியோ விரைவில் வெளியாகிவிடுமோ என்று அஞ்சப்படுகிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக நாளை ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இன்று ப்ரீமியர் காட்சிகள் வெளியிடப்படுகிறது.

திருட்டு வீடியோ
வெளிநாடுகளில் நடக்கும் ப்ரீமியர் ஷோக்களில் படத்தை வீடியோ எடுத்து அதை ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்கார் படத்தின் ப்ரீமியர் ஷோக்களில் வீடியோ எடுத்து அதை வெளியிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ்
சர்கார் படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் வெளியிடப்படும் என்று முன்பு சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டது. அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோக்கள் இல்லை என்று கூறியதால் சர்கார் ரிலீஸான சில மணிநேரத்தில் அதன் வீடியோ ஆன்லைனில் வெளியாகாது என்று ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் இன்று அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோக்கள் நடக்கிறது.
அமெரிக்கா
முதல் முறையாக அமெரிக்காவில் ஒரு இந்திய படத்தின் அறிமுக பாடல் இரண்டு முறை காண்பிக்கப்படுகிறது என்றால் அது சர்காருக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
#SarkarUSPremieres #Sarkar

கொண்டாட்டம்
சர்கார் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்த்துவிடும் ஆவலில் விஜய் ரசிகர்கள் பலர் உள்ளனர். சர்கார் படத்தை சூப்பர் ஹிட்டாக்காமல் அவர்கள் ஓயப் போவது இல்லை. கதை தொடர்பான பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது படக்குழுவுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. பட ரிலீஸை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் பேனர்கள், கட்அவுட்டுகள் வைத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சர்கார்
சர்கார் படம் 3 ஆயிரத்து 400 ஸ்கிரீன்களில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. 80 நாடுகளில் ரிலீஸாகும் சர்கார் வசூலில் நிச்சயம் புது சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்கு இந்நேரம் எல்லாம் சார்கார் தீபாவளி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











