சன் பிக்சர்ஸ் அதிரடி: சர்காரை அவ்வளவு சீக்கிரத்தில் ஆன்லைனில் பார்க்க முடியாது
Recommended Video

சென்னை: சர்கார் படத்தை உடனே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட முடியாத வகையில் ஒரு காரியத்தை செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது.
படத்தை முன்கூட்டியே வெளியிடும் திட்டத்தை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கைவிட்டுள்ளது.

சர்கார்
சர்கார் படத்தின் முதல்நாள் முதல் காட்சி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தான் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வினியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளது. படத்தின் ப்ரீமியர் ஷோ அமெரிக்காவில் முன்கூட்டியே வெளியாகாது. அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ துவங்கிய அரை மணிநேரத்தில் தான் தமிழகத்தில் படம் வெளியாகும்.

திருட்டு வீடியோ
ப்ரீமியர் ஷோக்களில் படத்தை வீடியோ எடுத்து அதை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸின் இந்த அதிரடி நடவடிக்கையால் படம் தமிழக தியேட்டரில் அதிகாலை காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும்போதே இணையதளத்தில் திருட்டுத் தனமாக வீடியோ வெளியிட முடியாது.

கார்த்திகா தியேட்டர்
தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தளிக்குளம் கார்த்திகா தியேட்டரில் சர்கார் படத்தை தொடர்ந்து 24 மணிநேரம் திரையிட உள்ளனர். 24 மணிநேரத்தில் 8 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. இந்த தகவல் அறிந்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

48 மணிநேரம்
சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் சர்கார் படத்தை தொடர்ந்து 48 மணிநேரம் திரையிட உள்ளனர். 16 காட்சிகள் சர்காருக்கு மட்டுமே. விஜய்யின் கோட்டையான ரோகினி தியேட்டர் நிர்வாகம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது அவரின் ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்துள்ளது. விஜய் படங்களில் சர்கார் தான் பிரமாண்டமாக 80 நாடுகளில் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











