twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்!

    |

    சென்னை: சர்கார் திரைப்படம் முதலில் அமெரிக்காவில் ரிலீஸாக உள்ளது.

    ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

    இந்த தீபாவளி தளபதி தீபாவளியாக பட்டாசு வெடிக்கப்போகும் நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்களை விட சர்கார் திரைப்படத்தை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பு அமெரிக்கா வாழ் ரசிகர்களுக்கு கிடைக்கப் போகிறது.

    Sarkar to release in US first

    சர்கார் திரைப்படத்தின் அமெரிக்க திரையரங்க உரிமையை நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவீஸ் யூ.எஸ்.ஏ பெற்றுள்ளன. அமெரிக்காவில் நவம்பர் ஐந்தாம் தேதி பல இடங்களில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.

    அதனால் சர்கார் திரைப்படத்தை முன்கூட்டியே பார்க்க விரும்பும் ரசிகர்கள் அமெரிக்கா செல்லலாம்.

    படத்தின் சில முக்கிய காட்சிகளை லாஸ் வேகாஸ் மற்றும் சில பகுதிகளில் ஷூட் செய்திருக்கிறார்கள். அதனால் அப்பகுதியிலுள்ள ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது நாஸ்டால்ஜிக் அனுபவத்தைக் கொடுக்கும்.

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    English summary
    Sarkar will be released in the US first. First premier will start on November 5th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X