நாளையே ரிலீஸாகும் சர்கார்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சர்கார் திரைப்படம் நாளை அமெரிக்காவில் ரிலீஸாக உள்ளது

நியூயார்க்: அமெரிக்காவில் சர்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது.

ஏ.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இந்தியாவில் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

Sarkar release in USA!

இத்திரைப்படத்தை அமெரிக்காவில் நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவிஸ் USA நிறுவனம் இணைந்து மிக பிரம்மாண்டமாக சுமார் 200-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட உள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

நவம்பர் 5-ம் தேதி படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக மும்முரமாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனங்கள் திட்டமிட்டபடி நாளை அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்படும் என அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.

இப்படி பல விஷயங்கள் சர்காரில் இருப்பதால் அமெரிக்க வாழ் இந்திய ரசிகர்கள் பலரும் சர்கார் தீபாவளிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X