Nadigarsangamelection: சர்கார் விஜய்க்கு நடந்த அதே பரிதாபம் பிரபல நடிகருக்கு

By Siva

Recommended Video

Nadigar Sangam Election:வாக்குகளை பதிவிட்ட முத்த நடிகைகள்

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் சர்கார் படத்தில் விஜய்க்கு நடந்த அதே சம்பவம் மோகனுக்கு நடந்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் இன்று நடக்குமா, நடக்காதா என்று தெரியாமல் இருந்த நிலையில் ஒரு வழியாக திட்டமிட்டபடியே இன்றே வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தேர்தல் நடக்கும் என்பது கடைசி நேரத்தில் உறுதியானதால் நடிகர், நடிகைகள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

Sarkar scene repeats in Nadigar Sangam election

மேலும் தேர்தல் நடக்கும் இடம் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இருந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளிக்கு மாற்றப்பட்டது. இதனால் வாக்களிக்க வருபவர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

இருப்பினும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து ஆவலுடன் வாக்களித்துவிட்டு சென்றார்கள். பிரபல நடிகர் மைக் மோகன் வாக்களிக்க பள்ளிக்கு வந்தார். ஆனால் அவர் பெயரில் ஏற்கனவே யாரோ வாக்களித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை கேட்ட மோகன், நான் இருக்கும்போது அது எப்படி யாரோ ஒருவர் என் பெயரில் வாக்களிக்க முடியும் என்று கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் தனது ஓட்டுரிமைக்காக போராடியும் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து அவர் கோபம் அடைந்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியேறினார்.

சர்கார் படத்தில் விஜய் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வருவார். ஆனால் சென்னையில் உள்ள யோகிபாபு விஜய் பெயரில் கள்ளஓட்டு அளித்துவிடுவார். இந்நிலையில் அதே போன்ற சம்பவம் நடிகர் சங்க தேர்தலிலும் நடந்துள்ளது. என்ன மோகன் விஜய் போன்று போராடாமல் கோபப்பட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.

ஒரு பிரபல நடிகருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் இன்று நடக்க நாங்க தான் காரணம் என்று மார்தட்டுகிறது பாண்டவர் அணி. இந்நிலையில் இப்படி கள்ள ஓட்டு போடும் விஷயத்தை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X