முதல் நாள் வசூலில் காலா, பாகுபலி 2-ஐ ஓரங்கட்டிய சர்கார்: வசூல் எவ்வளவு தெரியுமா?

By Siva

Recommended Video

சர்க்காரின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

சென்னை: சென்னையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் பாகுபலி 2 மற்றும் காலா பட வசூலை முந்தியுள்ளது.

ஏ.ஆர். முருதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் நேற்று பிரமாண்டமாக 3 ஆயிரத்து 400 ஸ்கிரீன்களில் வெளியானது.

சென்னையில் முதல் நாள் வசூலில் சர்கார் புதிய சாதனை படைத்துள்ளது.

செம வசூல்

செம வசூல்

சர்கார் படம் சென்னையில் 70 தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முதல் நாள் மட்டும் சர்கார் படம் சென்னையில் ரூ. 2.41 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ஒரு படம் முதல் நாளே ரூ. 2.41 கோடி வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

ரஜினி

சென்னை பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் காலா படம் ரிலீஸான அன்று ரூ. 1. 75 கோடியும், பாகுபலி 2 ரூ. 92 லட்சம் வசூல் செய்திருந்தது. அந்த படங்களின் வசூல் சாதனையை சர்கார் முறியடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் சர்கார் படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

மாஸ்

மாஸ்

சர்கார் அமெரிக்காவில் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 152 இடங்களில் சர்கார் வெளியானது. படம் ரிலீஸான முதல் நாள் ரூ. 2.31 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் படம் வெளியானால் தான் வசூல் நன்றாக இருக்கும் என்ற நினைப்பை மாற்றியுள்ளது சர்கார்.

மல்டிபிளக்ஸுகள்

பிற படங்களை போன்று இல்லாமல் மல்டிபிளக்ஸுகளில் சர்கார் படத்திற்கு கூடுதல் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் 8, 9, 11, 12 காட்சிகள் கூட ஓடுகிறது. அதனால் சர்கார் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X