விஜய் ரசிகர்களே, செப்டம்பர் 24ஆம் தேதியை உங்க காலண்டரில் குறிச்சி வச்சிக்கங்க!
சென்னை: சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் 24ம் தேதி வெளியாக உள்ளது.
மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் படம் சர்கார்.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாப்ரி கோஷ், ராதாரவி, யோகிபாபு, பழ கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் திரிப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சர்கார் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே சர்ச்சையானதாலும், ஆளப்போறான் தமிழன் கூட்டணியில் வரும் அடுத்த படம் என்பதாலும் ஏக போகத்திற்கு மகிழ்ச்சியில் உள்ளார்கள் ரசிகர்கள். ரஹ்மானின் இசையில் விவேக் மீண்டுமொரு ஆளப்போறான் தமிழன் பாடல் ரேஞ்சுக்கு மாஸான பாடலைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் 24 ஆம் தேதி சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் நிச்சயமாக பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி இருக்கும். ரஜினியின் பேட்ட, விஜய்யின் சர்கார் என இரண்டு படங்களும் சன் பிக்சர்ஸ் வசம் உள்ளதால், ரஜினிகாந்த் மற்றும் விஜய்யை ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது எப்படியும் விஜய்யின் ஓபனிங் பாடலைத் தான் ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications