சர்கார்: எதிர்பார்த்த பிரச்சனை ஒன்று, ஆனால் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை வேறு

By Siva

Recommended Video

சர்கார் படத்திற்கு பிரச்சினை மேல் பிரச்சினை- வீடியோ

சென்னை: சர்கார் படத்திற்கு எதிர்பார்த்த பிரச்சனை ஏற்படவில்லை. மாறாக வேறு பிரச்சனை தான் வந்தது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனையோ பிரச்சனையாக உள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது துவங்கியது பிரச்சனை.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்தது தான் பிரச்சனையானது.

சர்கார்

சர்கார்

சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு தமிழக சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. அடேங்கப்பா போஸ்டருக்கே இப்படின்னா, படத்தில் விஜய் தம்மடிப்பதற்கு எவ்வளவு பெரிய பிரச்சனை வருமோ என்று விமர்சிக்கப்பட்டது.

இலவசங்கள்

இலவசங்கள்

படத்தில் பல இடங்களில் விஜய் புகைப்பிடித்தது யாருக்கும் பெரிதாகவே தெரியவில்லை. போஸ்டருக்கு பொங்கியவர்கள் படத்தில் வந்த புகைப்பிடிக்கும் காட்சிகளை கண்டுகொள்ளவே இல்லை. இலவச மிக்சி, கிரைண்டரை எரித்த காட்சியால் விஜய் சிகரெட் பற்ற வைத்த காட்சியை யாரும் பெரிதுபடுத்தவில்லை.

கெட்ட பழக்கம்

கெட்ட பழக்கம்

படத்தில் பிரபலமான நடிகர் புகைப்பிடிப்பதை பார்த்துவிட்டு ரசிகர்களும் அதை நிஜத்தில் செய்வார்கள். மக்களை புகைப்பிடிக்கத் தூண்டும் வகையில் சர்கார் போஸ்டர் இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களுக்காக அவ்வளவு அக்கறையுடன் போஸ்டருக்கு கிளம்பிய எதிர்ப்பு படத்தில் வந்த புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு கிளம்பாதது ஆச்சரியமாக உள்ளது.

கேக்

கேக்

சர்கார் படத்திற்கு புகைப்பிடிக்கும் காட்சியால் பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்தால் இலவசங்களை எரிக்கும் காட்சியால் பிரச்சனை வந்தது. எதிர்ப்பை அடுத்து அந்த காட்சியை நீக்கினாலும் வெற்றிக் கொண்டாட்ட கேக்கில் மிக்சி, கிரைண்டரை வைத்து இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க என்று கேட்காமல் கேட்டுவிட்டார் முருகதாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X