ஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

By Siva

சென்னை: சர்கார் படத்தில் வரும் ரா ரா ராட்சசன் பாடல் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சர்கார். அண்மையில் படக்குழு அமெரிக்கா சென்று லாஸ் வேகாஸில் பாடல் மற்றும் சில காட்சிகளை படமாக்கியது.

Sarkar song leaked online

படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இந்நிலையில் விஜய் கலர்ஃபுல்லா ஆடை அணிந்து ஆடிய ரா ரா ராட்சசன் பாடல் வீடியோ ஆன்லைனில் கசிந்துள்ளது.

இந்த பாடல் கசிவால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. விஜய் பட ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள், வீடியோ கசிவது வழக்கமாகிவிட்டது.

இப்படி எதுவும் கசிந்துவிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தாலும் எப்படியோ கசிந்து விடுகிறது. இந்த பாடல் வீடியோவை கசிய விட்டது யார் என்று முருகதாஸ் விசாரித்து வருகிறாராம்.

ரசிகர்களுக்கு சர்பிரைஸாக இருக்க வேண்டிய விஷயங்களை மட்டும் சரியாக கசியவிடும் அந்த நபர் யாரோ?. சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X