இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே சர்கார் பாடல்களை ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்

By Siva

சென்னை: சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்க உள்ள நிலையில் பாடல்களை திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கான போட்டியை நடத்தியது.

கேள்விகள்

கேள்விகள்

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள விஜய் ரசிகர்கள் சன் டிவி சீரியல்களை பார்த்து அதற்கிடையே கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். சரியான பதில் அளித்தவர்களில் 250 பேர் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அவர்களுக்கு இலவச விமான டிக்கெட், விழாவுக்கான டிக்கெட் மற்றும் ரூ. 2000 ரொக்கம் அளிக்கப்படுகிறது.

தமிழ் ராக்கர்ஸ்

சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் இசை வெளியீட்டு விழாவுக்காக இப்படி பார்த்து பார்த்து வேலை செய்து வரும் நிலையில் தமிழ் ராக்கர்ஸ் நடுவில் புகுந்து தங்கள் சேட்டையை காண்பித்துவிட்டது. சர்கார் படத்தின் டிராக் லிஸ்ட்டை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் வெளியிட்டது. அந்த ட்வீட் வெளியான வேகத்தில் அனைத்து பாடல்களையும் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

பாடல்கள்

பாடல்கள்

முன்பெல்லாம் படங்களை அதுவும் ரிலீஸான அன்று வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் தற்போது பாடல்களை வெளியிட்டுள்ளது. விஜய் பட பாடல்கள் தமிழ் ராக்கர்ஸுக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலை இசை வெளியீட்டு விழா நடக்க உள்ள நிலையில் நேற்றே அந்த பாடல்களை தமிழ் ராக்கர்ஸில் இருந்து பலரும் டவுன்லோடு செய்துவிட்டனர்.

விஜய்

விஜய்

சர்கார் பாடல்கள் வெளியான சிறிது நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டது. இதையடுத்து மெட்ராஸ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் அந்த 5 பாடல்களும் வெளியிடப்பட்டன. தமிழ் ராக்கர்ஸுக்கு விஜய் மீது அப்படி என்ன கோபம். அது ஏன் விஜய் படங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது?. இந்த சம்பவத்தால் விஜய் ரசிகர்கள் கோபமும், கவலையும் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X