சர்கார் கதை திருடப்பட்டதா?: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்
Recommended Video

சென்னை: சர்கார் படத்தின் கதை திருட்டுக் கதை அல்ல என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அந்த கதை திருடப்பட்டது என்பதையும் அவர் முறையே நிரூபித்துள்ளார்.

ஜெயமோகன்
கள்ள ஓட்டு என்பதை மட்டும் கருவாக வைத்து எழுதப்பட்டது தான் சர்கார் படத்தின் கதை. இது திருடப்பட்ட கதை அல்ல. கள்ள ஓட்டு பற்றி யார் வேண்டுமானாலும் சிந்தித்து கதை எழுதலாம் என்று சர்கார் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ்
சர்கார் படத்தின் கதை என்னுடையது. அது திருடப்பட்டது அல்ல என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸும் தெரிவித்துள்ளார். தன் கதை திருடப்பட்டது அல்ல என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். முருகதாஸின் பேச்சை கேட்டு விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தீர்ப்பு
சர்கார் கதை தன்னுடையது என்று கூறி வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதி வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே கதை திருடப்பட்டது என்பதை எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலான குழு விரிவான விசாரணை நடத்தி கண்டுபிடித்துள்ளது.

டென்ஷன்
சர்கார் படம் நவம்பர் 6ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அக்டோபர் 30ம் தேதி என்ன தீர்ப்பு வருமோ என்ற டென்ஷனில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். சர்கார் கொண்டாட்டத்தை துவங்கிய போதிலும் அதை முழுமையாக கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். முன்பும் கூட கத்தி படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











