நீட் , கள்ள ஓட்டு, அரசியல்… இதுதான் சர்க்கார் கதையா… அடடே..!

சர்க்கார் திரைப்பட கதை கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது

Recommended Video

ஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது- வீடியோ

சென்னை: விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சர்க்கார் திரைப்படத்தின் கதை கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் இப்போது ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Sarkar story leaked?

ஏஆர்.முருகதாஸ் சமகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி தான் இயக்கும் படங்களுக்கு கதையமைத்து வருகிறார். ரமணாவில் தொடங்கி, கத்தி, துப்பாகி, ஸ்பைடர் என எடுத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் சர்க்கார் என பெயரிட்டுள்ளதால் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பது தெளிவாகிவிட்டது. தமிழகத்தில் பூதாகரமாக பேசப்பட்ட நீட் பிரச்சனை இப்படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கள்ள ஓட்டு என்பது இந்திய அரசியலில் என்னென்னெ விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இப்படத்தில் மையக்கருவாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது அவருடைய வாக்கு வேறு ஒருவரால் கள்ள வாக்காக பதியப்பட்டுள்ளது. அதைத் தடுப்பதற்காக முயற்சிகள் எடுக்கும் விஜய் அரசியலில் குதித்து புரட்சி செய்வதுபோல கதையமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Read more about: sarkar vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X