சர்கார் கதை என்னுடையது, வதந்திகளை நம்ப வேண்டாம்: முருகதாஸ்

By Siva

Recommended Video

சர்க்கார் பட பிரச்சனை குறித்து இயக்குனர் முருகதாஸ் விளக்கம்- வீடியோ

சென்னை: சர்கார் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக ஏ. ஆர். முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சர்கார் கதை தன்னுடையது என்று கூறிய உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று வெற்றியும் கண்டுள்ளார். படத்தில் வருண் பற்றிய தகவல் கொண்ட கடிதத்தை 30 வினாடிகள் காண்பிக்க உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் விளக்கம் அளித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

விளக்கம்

விளக்கம்

வழக்கம் போன்று நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் சின்ன விளக்கம் அளிக்கிறேன். பாக்யராஜ் சார் வந்து என்னை அழைத்து இந்த மாதிரி பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. ஒருவனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் என்ற கதையை அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்துள்ளார்.

சர்கார்

சர்கார்

அந்த ஒரு கரு, அந்த ஒரு ஸ்பார்க். மற்றபடி இந்த கதைக்கும், அந்த கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால் நமக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் கதையை பதிவு செய்துள்ளார் என்பதற்காக அவரை பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் படம் துவங்கும்போது ஒரு கார்டு போடுமாறு பாக்யராஜ் சார் சொன்னார். நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.

முருகதாஸ்

அந்த வகையில் மட்டும் தான் நான் படத்தில் அந்த கடித்ததை வெளியிடுகிறேன். மற்றபடி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆதரவு

நாங்கள் இருக்கிறோம் சார் உங்களுக்கு. எந்த சூழலிலும் நாங்கள் உங்கள் பக்கம் தான் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X