சர்காருக்கு விஸ்வாசம் காட்ட வந்த தல பட நடிகர்! டீசரா டிரைலரா என கன்ஃபியூஸ்!

சர்கார் பட டீசரை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Recommended Video

சர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்- வீடியோ

சென்னை: விஜய்யின் சர்கார் பட டீசரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சர்கார். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு சர்கார் படத்தின் டீசர் நேற்று வெளியானது. மாஸ் என்பதைத் தாண்டி கிளாஸான தளபதியாக விஜய் காட்சியளிக்கிறார். யூட்யூப் தளமே திக்குமுக்காடுமளவிற்கு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அருண்விஜய்

இந்த டீசரைப் பார்த்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். வியக்கவைக்கும் ட்ரைலர்.. விஜய் சார் அவருடைய சிறப்பான பங்கை அளித்திருக்கிறார். தீபாவளிக்காக காத்திருக்கிறேன் என நடிகர் அருண்விஜய் ட்வீட் செய்துள்ளார்.

நஸ்ரியா வாழ்த்து:

நடிகை நஸ்ரியா, "பூம்.. வாழ்த்துக்கள் டீம்" என ட்வீட் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். விரைவில் அவர் அஜித் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்-விஜய்

அஜித் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நடிகர் ரோபோ சங்கர் ட்விட் செய்துள்ளார். சர்கார் டீசர் வேற லெவல் என பதிவிட்டு, விஸ்வாசம் டீசர் வர உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்

சியிஓவிலிருந்து தலைவர். மிரட்டல் என பதிவிட்டு, விஜய்யண்ணா பயர் என்பதுபோல் எமோஜி போட்டுள்ளார் விஜய் சேதுபதி

புதிய அலை

சர்கார் படம் புதிய அலையை இக்காலகட்டத்தில் நிகழ்த்தப் போகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டைலிஷ்

நடிகர் விஜய் சூப்பர் டீசர் .. மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள். ஸ்டைலிஷாக உள்ளது, பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என நடிகரும் இயக்குனருமான மனோபாலா ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X