பல புதிய சாதனைகளை படைத்த சர்கார் டீசர்! இது விஜய் ரசிகர்களின் சாதனை!
சர்கார் பட டீசர் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது
Recommended Video

சென்னை: நேற்று வெளியான சர்கார் திரைப்பட டீசர் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. டீசர் வெளியாகும் நேரத்திற்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக 24 மணி நேரம் ஆவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துவிட்டது சர்கார் டீசர்.
டீசர் வெளியான பத்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது. இந்த வேகம் இன்னும் அதிகமாகி, இருபது நிமிடத்தில் இரண்டு மில்லியன், முப்பத்தைந்து நிமிடத்தில் மூன்று மில்லியன் எனச் சென்று ஒன்றேகால் மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.
1.50 மணி நேரத்தில் ஆறு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற டீசர் ஐந்தரை மணி நேரத்தில் பத்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.
மேலும், சர்கார் பட டீசர் வெளியாகி 30 நொடிகளில் ஐந்தாயிரம் லைக்குகளைப் பெற்றது. வெளியான 45 நிமிட நேரத்தில் ஐந்து லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் லைக்குகளைப் பெற்றது.
வெளியான 2 மணி நேரத்தில் எட்டு லட்சத்து அறுபத்து ஓராயிரம் லைக்குகளையும், ஐந்து மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
மிகக் குறுகிய நேரத்தில் அதிக பார்வையாளர்களையும் அதிக லைக்குகள் வாங்கி ட்ரெண்ட் ஆன டீசராகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த தகவலை விஜய்யின் ஆத்மார்த்தமான ரசிகர் 'தலைவா' சரவணன் என்பவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











