2018ம் ஆண்டின் நம்பர் ஒன் திரைப்படம் 'சர்கார்'... விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

சர்கார்தான் இந்த ஆண்டில் நம்பர் ஒன் திரைப்படம் என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை : இந்த ஆண்டு வெளியான படங்களில் சர்கார் தான் அதிக வசூல் செய்த படம் என பிரபல சினிமா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா நிறைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது. குறிப்பாக நல்ல கருத்தாக்கம் உள்ள திரைப்படங்களும், மாஸ் ஹீரோ படங்களும் ஒருசேர வெளிவந்து வெற்றி பெற்றன.

#Sarkar tops 2018 - Distributor Tirupur Subramanian

பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை, 96, கனா உள்ளிட்ட யதார்த்த சினிமாக்கள் நிறைய வெளிவந்தன. அதேபோல், காலா, 2.0, சர்கார், தானா சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம், மாரி 2 உள்ளிட்ட மாஸ் ஹீரோ படங்களும் வெளிவந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தன.

இதில் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களின் பட்டியலில் சர்கார்தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என பிரபல சினிமா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனை விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் ரஜினி நடித்த 2.0 படமும், 3வது இடத்தில் அவருடைய காலா படமும் இடம்பெற்றுள்ளதாக திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X