சர்காரில் இரண்டு முறை விஜய் இன்ட்ரோ பாடல்
நியூயார்க்: அமெரிக்காவில் சர்கார் திரைப்படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் இரண்டு முறை திரையிடப்பட உள்ளது.
தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படம் இன்று அமெரிக்காவில் ரிலீஸாகிறது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என ரசிகர்கள் கவுண்டிங்கில் கண்ணாக உள்ளனர்.

அமெரிக்காவில் ரிலீஸாகும் சர்கார் படத்தில் விஜய்யின் அறிமுக பாடல் மட்டும் இரண்டு முறை திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்க வாழ் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்காவில் சர்கார் திரைப்படத்தை நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவீஸ் யூஎ.ஸ்.ஏ ஆகியவை இணைந்து ரிலீஸ் செய்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் திரையிடப்படுகிறது.
உலகெங்கும் மொத்தம் 80 நாடுகளில் சுமார் 3400 திரையரங்குகளில் சர்கார் வெளியிடப்படுகிறது. சர்கார் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழகருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











