ட்விட்டர் ஏமோஜி பெற்ற முதல் தெலுங்கு படம்… மகேஷ்பாபு போட்ட பதிவு

ஹைதராபாத் : தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் " Sarkaru Vaari Paata " திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

மே 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் பரசுராம். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கு புதிய எமோஜி யை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. ஒரு தெலுங்கு படத்திற்கு ட்விட்டர் எமோஜி கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.

இரண்டரை வருட இடை வேளை

இரண்டரை வருட இடை வேளை

நடிகர் மகேஷ்பாபு கடைசியாக நடித்த படம் சரிலேரு நீக்கெவரு. 2020ஆம் ஆண்டு ரிலீசான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு ஏறத்தாழ இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு மகேஷ்பாபு நடித்து திரைக்கு வர இருக்கும் படம் " Sarkaru Vaari Paata ". மே 12-ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இரண்டரை வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் படத்தின் பாடல் யூ டியூபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரெண்டிங் ஆன படத்தின் டிரைலர்

ட்ரெண்டிங் ஆன படத்தின் டிரைலர்

" Sarkaru Vaari Paata " படத்தின் டிரைலர் மே இரண்டாம் தேதி ரிலீசாகி யூடியூபில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு முன் மகேஷ் பாபு படங்கள் செய்த அத்தனை சாதனைகளையும் முறியடித்து தற்போதுவரை இந்த படத்தின் டிரைலர் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது. படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதால் பிரமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். மே 7ஆம் தேதி படத்தின் ரிலீஸ் பங்ஷன் நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்களோடு நடிகர் விஜய் இதில் கலந்து கொள்ள இருக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. ஒருவேளை அது நடந்தால் ஒரே மேடையில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் அரங்கம் அதிரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

12ஆம் தேதி ரிலீஸ்

12ஆம் தேதி ரிலீஸ்

மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து இருக்கும் " Sarkaru Vaari Paata " திரைப்படம் உலகெங்கிலும் மே 12-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஆக்சன் காமெடி டிராமா வாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பரசுராம் இயக்கியிருக்கிறார். 14 Reels, Mythri movie makers மற்றும் மகேஷ் பாபு இணைந்து இதை தயாரித்துள்ளனர். படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர், சுப்புராஜ் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். தமன் இசை அமைக்க மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புது ஏமோஜி -

புது ஏமோஜி - " Sarkaru Vaari Paata "

இதுவரை எந்த தெலுங்கு திரைப்படத்திற்கும் கிடைக்காத அரிய கவுரவம் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் " Sarkaru Vaari Paata " படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்திற்காக மகேஷ்பாபு இருக்கும் புதிய எமோஜி வெளியிட்டுள்ளது ட்விட்டர் குழுமம். ட்விட்டர் ஏமோஜி பெற்ற முதல் தெலுங்கு படம் ஆக " Sarkaru Vaari Paata " புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்த Beast மற்றும் Yash நடித்த கேஜிஎப் 2 படத்திற்கு இதுபோலவே தனி எமோஜி வெளியிட்டது ட்விட்டர் குழுமம். இதை உறுதி செய்யும் விதமாக மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் " இந்த புதிய எமோஜி முயற்சி செய்து பாருங்கள் " என பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X