கழுத்துல ஒரு ரூபாய் டாட்டூ.. மாஸ் காட்டும் மகேஷ் பாபு.. ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் #SarkaruVaariPaata

சென்னை: மகேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு மாஸான ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Mahesh Babu Fun with Son Gautam | Sarileru neekkevaru, Spyder • Quarantine

சரிலேரு நீக்கெவ்வரு படத்தைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் 27வது படம் என்ன என்றும், யார் இயக்கப் போகிறார் என்ற கேள்விகளுக்கு தற்போது விடை கிடைக்கிறது.

கீதா கோவிந்தம் இயக்குநர் பரசுராம் பெட்லா மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்திற்கு 'Sarkaru Vaari Paata' சர்காரு வாரி பாட்டா என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

தந்தையின் பிறந்தநாள்

தந்தையின் பிறந்தநாள்

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ண கட்டமேனியின் பிறந்தநாளை முன்னிட்டு, மகேஷ் பாபுவின் 27வது படத்தின் படு மாஸான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஹேப்பி பர்த்டே சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா என தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை போட்டு அந்த ஃபர்ஸ்ட் லுக்கை மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த மாதிரி படம் வேண்டாம்

அந்த மாதிரி படம் வேண்டாம்

தொடர்ந்து தத்துவம் சொல்வது போன்றும், மக்களை காப்பாற்றுவது போன்ற கதைகளில் நடித்து வந்த மகேஷ் பாபுவுக்கு ஜாலியாக ஒரு கதை பண்ண வேண்டும் என்ற முடிவு அண்மையில் எடுத்திருந்தார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் பெட்லாவுக்கு மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கழுத்தில் ஒரு ரூபாய் டாட்டூ

கழுத்தில் ஒரு ரூபாய் டாட்டூ

மைத்ரி அஃபிசியல் தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் சர்காரு வாரி பாட்டா படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசானதில் இருந்து, மகேஷ் பாபுவின் கழுத்தில் இருக்கும் ஒரு ரூபாய் டாட்டூ அவரது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

அடுத்த பிளாக்பஸ்டர்

அடுத்த பிளாக்பஸ்டர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நடித்து வரும் படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வருகின்றன. வசூலில் 200 முதல் 250 கோடி வரை நெருங்கி உள்ளார் மகேஷ் பாபு. இந்நிலையில், கீத கோவிந்தம் இயக்குநர் மற்றும் மகேஷ் பாபுவின் இந்த புதிய கூட்டணி அடுத்த பிளாக்பஸ்டர் படம் தருவது உறுதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹீரோயின் யார்

ஹீரோயின் யார்

கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். கடைசியாக ரிலீசான மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு படத்திலும் ராஷ்மிகா தான் ஹீரோயின். இந்நிலையில், இந்த படத்திலும் ராஷ்மிகாவே ஹீரோயினாக நடிப்பாரா? அல்லது பூஜா ஹெக்டேவா இல்லை பாலிவுட் நடிகை யாராவது நடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X