twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னடப் படங்களை தமிழகத்திலும் திரையிட வேண்டும்... ‘கன்னடத்துப் பைங்கிளி’ கோரிக்கை

    |

    சென்னை: கன்னட திரைப்படங்கள் தமிழகத்தில் திரையிடுவது மிகவும் குறைவாக உள்ளது. எனவே, கன்னட திரைப்படங்கள் தமிழக திரையரங்குகளில் திரையிட உரிமையாளர்கள் உதவ முன்வர வேண்டும். இதனால், கன்னட திரைப்படத்துறை நன்கு வளர்ச்சி பெறும் என நடிகை சரோஜாதேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் கன்னட திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக சலனசித்ர அகாடமி, இண்டோ சினி அப்ரிசியேஷன் அமைப்புகள் இணைந்து நடத்தியது.

    Saroja devi insists for Kanada movies

    இந்த நிகழ்ச்சியில் பழம் பெரும் நடிகை சரோஜா தேவி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    கலாச்சார ஒற்றுமை...

    தென்னிந்திய திரைப்படங்களில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. அதோடு, எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட புகழ்பெற்ற நடிகர்களின் படங்கள் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களிலும், கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோரின் படங்கள் சென்னை, கோவை, தருமபுரி ஆகிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், இருமாநில நடிகர்கள் பல்வேறு படங்களில இணைந்து நடித்து, கலாச்சார ஒற்றுமையைப் பேணிக் காத்து வருகின்றனர்.

    ரசிகர்கள்...

    கர்நாடகத்தில் 6.5 கோடி பேர் உள்ளனர். இவர்களில் தமிழ்ப் படங்களுக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே, கர்நாடகத்தில் உள்ள 700 திரையரங்குகளில் 400 திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

    கன்னடப் படங்கள்...

    ஆனால், கன்னட திரைப்படங்கள் தமிழகத்தில் திரையிடுவது மிகவும் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிலரிடம் நான் பேசியபோது, கன்னடப் படங்களை இங்கு திரையிட்டால், பார்க்கத் தயாராக இருப்பதாக சொன்னார்கள்.

    கோரிக்கை...

    எனவே, தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத்தில் கன்னடப் படங்கள் திரையிட இங்குள்ள சினிமா சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆவண செய்ய வேண்டும். அதோடு, கன்னட திரைப்படங்கள் தமிழக திரையரங்குகளில் திரையிட உரிமையாளர்களும் முன்வர வேண்டும். இதனால், கன்னட திரைப்படத்துறை நன்கு வளர்ச்சி பெறும்" என்றார்.

    விக்ரமன்...

    இந்த விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, இயக்குனர்கள் பி.வாசு, ரமேஷ்கண்ணா, தயாரிப்பாளர்கள் ஜி.கே.ரெட்டி, காட்ரகட்ட பிரசாத், நடிகைகள் லட்சுமி, அம்பிகா, சுகாசினி, சாயாசிங், குட்டி பத்மினி, கர்நாடக சலனசித்ர அகாடமி தலைவர் எஸ்.வி.ராஜேந்திர சிங் பாபு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் எச்.டி.கங்காராஜு, கர்நாடகா எம்எல்ஏ முனிரத்னம், விழா ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    10 படங்கள்...

    வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள இவ்விழாவில், கன்னடத்தில் வெளியான ''திதி'', ''மிஸ்டர் அன்ட் மிசஸ் ராமாச்சாரி'', ''பர்ஸ்ட் ரேங் ராஜு'', ''ரங்கி தாரங்கா'', ''சிவலிங்கா'', ''கர்வா'', ''யு டர்ன்'', ''மாரிகொண்டவரு'' உட்பட 10க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது.

    நோக்கம்...

    கன்னடப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யவும், கன்னடப் படங்களின் வியாபாரத்தை தமிழ்நாட்டுக்கு விரிவுபடுத்தவும் இவ்விழா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Veteran actress Saroja Devi has requested the cinema industry to release canada movies in Tamilnadu largely.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X