»   »  பழம்பெரும் நடிகை ஈ.வி.சரோஜா மரணம்

பழம்பெரும் நடிகை ஈ.வி.சரோஜா மரணம்

Subscribe to Oneindia Tamil

மறைந்த இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவியும், பழம் பெரும் நடிகையுமான ஈ.வி.சரோஜாசென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

என் தங்கை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சரோஜா. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாகநடித்தார் சரோஜா. பாக்கியலட்சுமி, குலேபகாவலி, காத்தவராயன், படிக்காத மேதை உள்ளிட்ட 100க்கும்மேற்பட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தியிலும் அவர் நிடித்துள்ளார்.

டி.ஆர். ராமண்ணாவின் மனைவியான ஈ.வி.சரோஜா சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.சர்க்கரை வியாதியும் இருந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை சரோஜா மரணமடைந்தார்.

இன்று மாலை சரோஜாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. சரோஜாவுக்கு நளினிஎன்ற மகள் மட்டும் உள்ளார்.

சரோஜாவின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Read more about: actress e v saroja dies
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil