twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதீங்க.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த வேம்புலி!

    |

    சென்னை: வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் நடிகர் அஜித்தின் நடனம் பரோட்டாவிற்கு மாவு பிசைவது போல இருப்பதாக மோசமாக விமர்சித்திருந்தார்.

    சினிமாவை தாண்டி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை (குறிப்பாக மணிரத்னம்) பெர்சனலாக கலாய்த்து பேசுவதை தனது பாணியாக வைத்துள்ளார்.

    இவருக்கு எதிராக திரை துறையை சார்ந்த பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், வலிமை விமர்சனத்தை பார்த்து கடுப்பான வேம்புலி நடிகர் ஜான் கொக்கன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    25 ஆண்டு இசைப்பயணம்… எல்லாம் உங்களால் தான்… யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி !25 ஆண்டு இசைப்பயணம்… எல்லாம் உங்களால் தான்… யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி !

    சினிமா இருந்தால் தான்

    சினிமா இருந்தால் தான்

    அன்புள்ள ப்ளூ சட்டை மாறன் அவர்களுக்கு நீங்கள் ஒரு பெரிய திரை விமர்சகர் நான் ஒரு சாதாரண நடிகன் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் எனக்கு உங்களிடம் நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து ஒரு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது சினிமா இருந்தால் நீங்களும் இருக்கிறீர்கள் சினிமா என்றாலே விமர்சனமும் சேர்ந்துதான், விமர்சனம் சினிமாவை வரவைப்பது அதனாலேயே சினிமா விமர்சகன் மதிக்கப்படுகிறான்.

    மரியாதை முக்கியம்

    மரியாதை முக்கியம்

    குறைகளை சுட்டிக் காட்டுவது எந்த அளவு தேவையோ அதே அளவு பிறரை மரியாதையாக பேசுவதும் தேவை சினிமாவில் உழைப்பவர்கள் பலரும் தங்கள் ஈடுபாட்டை அர்ப்பணிப்பை கொடுத்து உழைப்பவர்கள் பெரிய பெரிய இயக்குனர்கள் நடிகர்கள் சூப்பர் ஸ்டார்கள் பணியாற்றுகிறார்கள் அவர்கள் தங்களை இந்த அடையாளங்களில் நிலைநிறுத்த எத்தனை போராடி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு அந்த இடத்திற்கு வந்து இருப்பார் என்பது உங்களுக்கே தெரியும் .

    நீங்களும் படம் இயக்கி இருக்கீங்க

    நீங்களும் படம் இயக்கி இருக்கீங்க

    முதலில் நடிகராக தன்னை மக்கள்முன் நிரூபித்த பிறகே அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆகிறார் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஆவது நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள் என்பதே என் கோரிக்கை. நீங்களும் ஒரு படம் இயக்கி இருக்கிறீர்கள் அதன் வலி வேதனை என்னவென்று உங்களுக்கும் புரியும் எந்தப் படைப்பாளியும், தன் படைப்பு வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன் படைப்பார்கள் இந்த கொரோனாவில் படப்பிடிப்பு நடத்தி திரைக்கு கொண்டு வருவது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்தவர் நீங்கள் அது மக்களை சென்று சேருவது எளிதானது இல்லை.

    கேவலமாக பேச வேண்டாம்

    கேவலமாக பேச வேண்டாம்

    சினிமா எதிர்பார்ப்பது போல நடப்பதில்லை கதைகள் சில நேரம் பிடிக்கும் பிடிக்காமல் போகும் அப்படித்தான் சினிமா. நீங்கள் விமர்சனம் செய்யுங்கள் தொழில் நுட்பங்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்யுங்கள், தமிழ் சினிமாவைப் புரிந்து விமர்சனம் செய்யுங்கள். ஆனால் யாரையும் தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசுவதை தவிர்த்து மரியாதையுடன் விமர்சியுங்கள்.

    எப்பவுமே அப்படித்தான்

    எப்பவுமே அப்படித்தான்

    இதுவரை நீங்கள் மோசமாக கேவலமாக பேசிய விமர்சனங்கள் தான் அதிகம் இருக்கின்றன அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை யார் வேண்டுமானாலும் பேசி விடலாம் திறமையாக பேசுவது தான் கடினம் அப்படி நீங்கள் மட்டமான சொற்களை விமர்சிப்பது மட்டமான சினிமா என்று சொல்லாமல் விமர்சனத்தையே மட்டமானது என்று ஆகிவிடும். உங்கள் பின்னால் வரும் விமர்சகர்களுக்கு மரியாதையை மக்களிடையே குறைத்துவிடும்.

    லட்சம் வார்த்தை இருக்கு

    லட்சம் வார்த்தை இருக்கு

    தமிழில் நல்ல சொற்கள் பல லட்சம் இருக்கின்றன அவற்றை கொண்டு நல்ல மரியாதையான சொற்களால் நாகரீக விமர்சனம் செய்யுங்கள் பிறரை உங்கள் பக்கம் திருப்புவதற்காக இருப்பதற்காக இல்லாமல் எல்லோருக்கும் வெற்றியை தரும்படி விமர்சியுங்கள் இங்கே சினிமாவை நம்பி சினிமாவில் நிற்க வேண்டும் என்று என்னை போன்று பலர் இருக்கிறார்கள். அவர்களும் வளரவேண்டும் சினிமா இருந்தால்தான் இது எல்லாமே அதனால் அடுத்து நீங்கள் விமர்சனம் செய்யும்போது ஆக்கப்பூர்வமாக விமர்சனம் செய்வது நல்லது.

    ஏறி மிதிக்க கூடாது

    ஏறி மிதிக்க கூடாது

    உங்களால் பலரும் வாழவேண்டும் நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் சினிமாவில் எத்தனை துறைகள் இருக்கின்றன அதில் எத்தனை பேர் சாதிக்க நினைத்து பாதியில் போகிறார்கள் அதிலும் மீண்டு வருபவர்கள் தான் மக்கள் முன் பெயருடன் நிற்கிறார்கள் அதையெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டும் தங்களின் விமர்சனங்கள் படைப்பாளிக்கு ஊக்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை புண்படுத்தும் விதமாகவோ திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை தடுக்கும் விதமாக இருக்கக் கூடாது. நீங்கள் இதைப் புரிந்து நடப்பார்கள் என்று நம்புகிறேன் சினிமாவில் இருக்கும் ஒரு சிறிய நடிகனாக என் கோரிக்கை நான் அஜித் சாரின் ரசிகன் அவர் ஸ்டைலிலேயே இறுதியாக ஒன்று "நீங்க என்ன வேணா பண்ணுங்க.. உங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க.. ஆனா அடுத்தவன மிதிச்சி முன்னேறனும் நினைக்காதீங்க.. வாழு வாழ விடு" என மிக நீண்ட கடிதத்தை எழுதி ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    English summary
    Sarpatta Parambarai actor John Kokken request to Blue Sattai Maaran regarding his latest Valimai review.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X