twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டான்ஸிங் ரோஸ் என்னுடைய மாணவன்தான்.. மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம்.. வெளியான சுவாரசிய தகவல்!

    |

    சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த டான்ஸிங் ரோஸ் தன்னுடைய மாணவன் தான் என பிக்பாஸ் பிரபலமான ஆரி மனம் திறந்துள்ளார்.

    Recommended Video

    Sarpatta parambharai DANCING ROSE | Shabeer Kallarakkal, Pa. Ranjith

    பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்தனர்.

    ரசிகர்கள்… வெறுப்பாளர்கள்… நடுநிலையாளர்கள்… நாணயத்தின் 3 பக்கங்கள்… அஜித் அறிக்கை! ரசிகர்கள்… வெறுப்பாளர்கள்… நடுநிலையாளர்கள்… நாணயத்தின் 3 பக்கங்கள்… அஜித் அறிக்கை!

    இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரப்பேற்பை பெற்று, பாராட்டுக்களை குவித்து வருகிறது. படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    8 மாத குழந்தையை இதய நோயிலிருந்து மீட்க உதவுங்களேன் ப்ளீஸ்

    ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி

    ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி


    கபிலனாக நடித்த ஆர்யா, வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன், டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல் டாடி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி என பலரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

    டான்ஸிங் ரோஸுக்கு ரசிகர் பட்டாளம்

    டான்ஸிங் ரோஸுக்கு ரசிகர் பட்டாளம்

    இதனால் சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லரக்கலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

    எதிர் அணியாக இருந்த போதும் நேர்மை

    எதிர் அணியாக இருந்த போதும் நேர்மை

    எதிர் அணியாக இருந்த போதும் ஒரு நேர்மையுடன் இருப்பார் டான்ஸிங் ரோஸ். கபிலனிடம் விதண்டாவாதம் பேசும் போதும் சரி, ரிங்குக்குள் அடி வாங்கி விட்டு அதனை வேம்புலியிடம் செய்து காட்டும் போதும் சரி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

    விளையாட்டில் நியாயம் இருக்க வேண்டும்

    விளையாட்டில் நியாயம் இருக்க வேண்டும்

    அதேபோல் வேம்புலிக்கும் கபிலனுக்கும் இடையிலான முதல் மோதலின் போது தணிகா அடியாட்களை இறக்கி மேட்சை கலைக்கும் போது வெட்கமா இல்லையா என வேம்புலியை திட்டும் இடத்தில் அப்லாஸை அள்ளியிருப்பார் டான்ஸிங் ரோஸ். இதேபோல் வேம்புலி கபிலனிடம் அடி வாங்கி தோற்ற போதும் இதுதான் வெற்றி என்று விளையாட்டில் நியாயம் இருக்க வேண்டும் என்று உணர்த்துவதும் வேற ரகம்.

    மக்கள் மனதில் ஸ்ட்ராங்கான டான்ஸிங் ரோஸ்

    மக்கள் மனதில் ஸ்ட்ராங்கான டான்ஸிங் ரோஸ்

    சில காட்சிகளில் வந்த போதும் ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்காக அமர்ந்து விட்டார் டான்ஸிங் ரோஸ்.
    டான்ஸிங் ரோஸ் பாத்திரம் இங்கிலாந்தை சேர்ந்த புகழ் பெற்ற பாக்ஸர் நசீம் ஹமீத்தை மையப்படுத்தி உருவானது. ரிங்குக்குள் நசீம் ஹமீத்தின் ஒவ்வொரு அசைவும் நடனத்தைப் போலவே இருக்கும். தன் கால் அசைவுகளுக்காகவே பெரும் புகழைப் பெற்றவர் நசீம் ஹமீத். அவரது வீடியோக்களை பார்த்தே இந்த உடல் மொழியை கொண்டு வந்ததாக கூறியுள்ளார் நசீம் ஹமீத்.

    நெருங்கி வா முத்தமிடாதே மூலம் அறிமுகம்

    நெருங்கி வா முத்தமிடாதே மூலம் அறிமுகம்

    ஷபீர் ஒன்றும் சினிமாவுக்கு புதியவர் அல்ல. 2014 ஆம் ஆண்டு வெளியான "நெருங்கி வா முத்தமிடாதே" படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். 'பேட்ட, டெடி அடங்கமறு' திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் ஷபீர்.

    டான்ஸிங் ரோஸ் என் மாணவன் தான்

    டான்ஸிங் ரோஸ் என் மாணவன் தான்

    இந்நிலையில் ஷபீர் கல்லரக்கள் தன்னுடைய மாணவர்தான் என பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான ஆரி மனம் திறந்துள்ளார். ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்புக்கான பயிற்சி வகுப்பை எடுத்தார். இதில் 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Array

    Array

    அப்போது பேசிய ஆரி அர்ஜுனன், "எல் வி பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் நடிப்பு பயிற்சி இந்த ஆண்டுதான் தொடங்கியுள்ளது. இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தான், நாளைய வெள்ளித்திரையில் ஜொலிக்க போகும் நட்சத்திரங்கள். நாளைய நட்சத்திரங்களை இப்போது பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    இனிது இனிது திரைப்படத்தில் தொடங்கினேன்

    இனிது இனிது திரைப்படத்தில் தொடங்கினேன்

    அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு உற்சாகமாக இருந்தது. நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோசம் மிகப் பெரியது. நான் நடிப்பு பயிற்சியாளனாக எனது பயணத்தை இனிது இனிது திரைப்படத்தில் தொடங்கினேன்.

    மறக்க முடியாத நினைவாக இருக்கும்

    மறக்க முடியாத நினைவாக இருக்கும்

    காலப்போக்கில் நான் நடிகனாக பிஸியாக மாறியதால் அதில் இருந்து பல ஆண்டுகள் விலகி இருந்தேன். இப்போது சிறப்பு நடிப்பு பயிற்சியாளராக இந்த அகாடமியில் வகுப்பு எடுத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் என நம்புகிறேன்.

    டான்ஸிங் ரோஸ் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்

    டான்ஸிங் ரோஸ் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்

    இப்போது சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எனது மாணவன் தான். அவரை திரையில் காணும்போது நான் அதிகம் சந்தோஷப்பட்டேன். அப்படித்தான் இந்தக் அகாடமியிலிருந்து செல்லும் மாணவர்கள் யாரேனும், நாளை வெள்ளி திரையில் ஜொலித்தால் அவர்களின் பெற்றோர்களை விட நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.

    நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்

    நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்

    மேலும் ஒரு குருவா நான் மாணவர்களுக்கு சொல்வது நேரத்தை சரியாக பயன்படுத்தனும், நான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் போது நிறைய நேரங்கள் விரயமானது. எனவே அவற்றை சரியாக பயன்படுத்த மாணவர்களை அறிவுறுத்தினேன். இவ்வாறு நடிகர் ஆரி அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.

    Read more about: aari arjunan
    English summary
    Sarpatta parambarai Dancing Rose is my student Aari Arjunan opens up. Actor Shabir Kallarakkal acted in Sarpatta parambarai as Dancing rose character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X