அடிதூள்...நியூயார்க் டைம்ஸ் சர்வதேச திரைப்பட பட்டியலில் சார்பட்டா பரம்பரை

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் சார்பட்டா பரம்பரை. தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இந்த படம் ஜுலை 22 ம் தேதி பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் செய்யப்பட்டது.

Recommended Video

Sarpatta Parambarai ரங்கன் வாத்தியார் Meme Collections | Oneindia Tamil

இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கே 9 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்தது. வடசென்னையில் இரண்டு 1980 களில் பிரபலமான குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்தியாவில் அவசர நிலை அமலில் இருந்த சமயத்தில் இரு தரப்பினரிடையில் பல தலைமுறைகளாக இருந்த பிரச்சனை பற்றிய கதை.

அந்த கால அரசியல் சூழல், விளையாட்டு சூழல் ஆகிய இரண்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இந்த படம் ரசிகர்களிடம் மட்டுமல்ல பிரபலங்கள், விமர்சகர்கள் என பலரிடமும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. நடிகர்களின் நிஜ பெயர்களை மறந்து கேரக்டர்களின் பெயர்களை சொல்லி கூப்பிடும் அளவிற்கு கபிலன், மாரியம்மாள், டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார் உள்ளிட்ட பெயர்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

ஒரே இந்திய திரைப்படம்

ஒரே இந்திய திரைப்படம்

இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்ட 5 சர்வதேச திரைப்படங்களின் பட்டியலில் சார்பட்டா பரம்பரை படமும் இடம் பெற்றுள்ளது. இந்த படம் பற்றியும், டைரக்டர் பா.ரஞ்சித் பற்றியும் பெரிய அளவில் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய திரைப்படம் சார்பட்டா பரம்பரை தான்.

இந்த படங்களும் உண்டு

இந்த படங்களும் உண்டு

இந்த சர்வதேச படங்கள் பட்டியலில் The Awakening of the Ants, All Hands on Deck, His House, Arab Blues ஆகிய படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த படங்களில் பெரும்பாலானவை ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டவையாகும். இருந்தாலும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற படங்களாக இவை உள்ளன.

தெறிக்கும் மீம்கள்

தெறிக்கும் மீம்கள்

ஏற்கனவே சோஷியல் மீடியாக்களில் சார்பட்டா பரம்பரை பற்றிய பல மீம்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் செல்வது போன்ற காட்சியை வைத்தே பல மீம்கள் உருவாக்கப்பட்டு விட்டன.

வா வாத்தியாரே

வா வாத்தியாரே

சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த பசுபதியை வரவேற்கவும் சார்பட்டா பரம்பரை ஸ்டைலிலேயே ஆர்யாவும் கருத்து பதிவிட்டிருந்தார். இதுவும் செம வைரலாகி கலக்கியது. இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் சார்பட்டா பரம்பரையை அங்கீகரித்திருப்பது படக்குழுவினரையும், ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

பாராட்டிய கமல்

பாராட்டிய கமல்

இதற்கு முன் படம் வெளியிடப்பட்டு சில நாட்களிலேயே படக்குழுவினர் சார்பட்டா பரம்பரை சக்சஸ் மீட்டை கொண்டாடினர். அதைத் தொடர்ந்து கமலும் சார்பட்டா பரம்பரை படக்குழுவை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். இது போன்ற படங்கள் எப்போதாவது தான் வரும் என மனம் திறந்து பாராட்டி இருந்தார்.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

சார்பட்டா பரம்பரையில் நடித்த பிறகு இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. பெயர் சொன்னாலே தெரியும் அளவிற்கு பிரபலமும் ஆகி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X