ஆக்லாந்து இணையதளத்தின் டாப் 10 சர்வதேச பட்டியலில் 3வது இடத்தை பிடித்த சார்பட்டா பரம்பரை

சென்னை : ஆர்யா லீட் கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை.

1970களில் வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது.

அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியான இந்தப் படம் பல்வேறு சிறப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

சார்பட்டா பரம்பரை படம்

சார்பட்டா பரம்பரை படம்

நடிகர் ஆர்யா லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவானது. கடந்த 1970களில் வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையமாக கொண்டு படம் வெளியானது.

ஓடிடி வெளியீடு

ஓடிடி வெளியீடு

படத்தில் ஆர்யாவுடன், ஜான் கொக்கேன், ஷபீர் கல்லெரெக்கல், சந்தோஷ் பிரதாப், பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் விமர்சன ரீதியாக சிறப்பான பாராட்டுக்களை பெற்றது. ரசிகர்களும் படத்தை கொண்டாடினர்.

சர்வதேச டாப் 10 பட்டியலில் இடம்

சர்வதேச டாப் 10 பட்டியலில் இடம்

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக கொண்டு வந்திருந்தார் பா ரஞ்சித். படம் பல்வேறு சிறப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்நிலையில் ஆக்லாந்தின் திரைப்பட தரவு இணையதளமான Letterboxd கடந்த ஆண்டிற்கான அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆக்ஷன் படங்களில் 3வது இடம்

ஆக்ஷன் படங்களில் 3வது இடம்

இதில் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது சார்பட்டா பரம்பரை இதேபோல அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கடந்த ஆண்டின் சிறந்த ஆக்ஷன் படங்களின் வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது சார்பட்டா பரம்பரை.

 ஆர்யா மகிழ்ச்சி பதிவு

ஆர்யா மகிழ்ச்சி பதிவு

இதுகுறித்து நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த செய்தியை தயாரிப்பாளர் தனஞ்செயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மின்னல் முரளி 9வது இடம்

மின்னல் முரளி 9வது இடம்

இந்த வரிசையில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியான மின்னல் முரளி படமும் 9வது இடத்தை பிடித்துள்ளது. ஹாலிவுட்டின் சிறப்பான படங்களை பின்னுக்கு தள்ளி இந்த வரிசையில் இந்த படங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழில் சிறந்த படங்கள் ரிலீசாவது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X