சார்பட்டா பரம்பரை ஓடிடியில் ரிலீஸ்? கவலையில் ரசிகர்கள் !

சென்னை : ஆர்யா நடிப்பில் உருவான சார்பேட்டா திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

பா. ரஞ்சித்இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. பாக்சிங்கை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில், துஷாரா விஜயன், கலையரசன் , சஞ்சனா நடராஜன், பசுபதி, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்யா

ஆர்யா

சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸிக் வீராக ஆர்யா நடித்துஉள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யாவின் 30வது படமான இந்த படத்திற்காக மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடலை கட்டுகோப்பாக வைத்துள்ளார் ஆர்யா.

மையக்கதை

மையக்கதை

வடசென்னைப்பகுதியில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டை தான் சார்பட்டா பரம்பரை படத்தின் கதைக்களம், சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு பரம்பரைக்கும் இடையேயான குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகர்கிறது.

ஆர்யாவுக்கு ஜோடியாக

ஆர்யாவுக்கு ஜோடியாக

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் பசுபதி , ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒடிடியில்

ஒடிடியில்

இந்நிலையில் சர்பாட்டா பரம்பரை திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளை கவர்ந்தது

குழந்தைகளை கவர்ந்தது

ஆர்யா, சாயிஷா இருவரும் இணைந்து நடித்த டெடி திரைப்படமும் ஒடிடியில் தான் வெளியானது. இப்படம் குழந்தைகளை கவரும் திரைப்படமாக அமைந்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தது. தற்போது சர்பேட்டா படவும் ஒடிடியில் வெளியாகும் என்ற தகவலால் ரசிகர்கள் கவலை அமைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X