3 மதத்தினரின் ஒற்றுமை.. எதேச்சையாய் நடந்ததா? திட்டமிடப்பட்டதா? சார்பட்டாவில் இதை கவனிச்சீங்களா!
சென்னை: சார்பட்ட பரம்பரை படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 21ஆம் தேதி அமேஸான் பிரைம்மில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை.
ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், ஜான் கோக்கென் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் வரவேற்பு
1970களில் வட சென்னையில் இருந்த சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரைக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கட்சி பெயர்கள்
படத்தில் அந்தக்காலக் கட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அப்படியே காட்டப்பட்டுள்ளன. கட்சி பெயர்கள், கட்சி தலைவர்களின் பெயர்கள் என எதுவும் மாற்றப்படாமல் அப்படியே காட்டப்பட்டுள்ளது.

கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர்
அடித்தட்டு மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அனல் பறக்கும் பல வசனங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய் என பலரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர்.

பேசு பொருளான காட்சி
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது. அதாவது இரண்டாம் பாதியில் கபிலனான நடிகர் ஆர்யா, தொப்பையும் தொந்தியுமாக இருந்த தனது உடலை கடினமாக முயற்சியும் பயிற்சியும் செய்து சிக்ஸ் பேக்குடன் கட்டுடலாக்கி மீண்டும் குத்துச்சண்டை களத்தில் குதிக்க வருவார்.
Recommended Video

மூன்று நண்பர்கள்
இதற்காக கடலிலும் கடற்கரையிலும் தீவிரமாக பயிற்சி செய்வார். போட்டி நடைபெறும் நாளில் தனது நண்பர்களான மீரான் மற்றும் டாடி என அழைக்கப்படும் ஜான் விஜய்யுடன் கடற்கரையில் இருந்து திரும்புவார்.

மூன்று மதத்தினர்
அப்போது தன்னுடைய சார்பட்டா பரம்பரையையே சேர்ந்த ராமன் குடும்பத்தினரால் தாக்கப்படுவார் ஆர்யா. இந்தக் காட்சியில் இந்துவான கபிலனை, கிறிஸ்தவரான டாடி, மற்றும் இஸ்லாமியரான மீரான் ஆகியோர் காப்பாற்றுவார்கள்.

திட்டமிட்டு எடுக்கப்பட்டதா?
மும் மதத்தினரின் ஒற்றுமையை ஒரே காட்சியில் காட்டியிருப்பார் இயக்குநர் ரஞ்சித், இந்த போட்டோவை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் இந்த காட்சி எதேச்சையாக அமைந்ததா அல்லது திட்டமிட்ட எடுக்கப்பட்டதா என விவாதித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











