twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையரங்குகளில் வெளியாகிறதா சார்பட்டா பரம்பரை... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    |

    சென்னை : தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகிறார் இயக்குனர் பா ரஞ்சித் அந்த வகையில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    Recommended Video

    வீட்டுக்கு போனா கைய தூக்க முடியாது | Sarpatta | Actor Arya Exclusive | Filmibeat Tamil

    குத்துச் சண்டை விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன்,பசுபதி, அனுபமா, ஜான் கொக்கேன், சபீர், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய்,பிரியதர்ஷினி, கலையரசன், என மிகப் பெரிய பட்டாளமே நடித்து இருந்தது.

    “ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை“ கலங்கிய மனதுடன் செய்து முடித்த மனைவி!“ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை“ கலங்கிய மனதுடன் செய்து முடித்த மனைவி!

    திரும்பும் இடமெல்லாம் பாசிட்டிவான விமர்சனங்களால் நிரம்பி வழிந்த சார்பட்டா பரம்பரை திரையரங்குகளில் வெளியாக இருந்து பின் சூழல் காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. இப்பொழுது திரையரங்குகள் மீண்டும் திறக்க உள்ளதால் சார்பட்டா பரம்பரை திரையில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

    ரவுடிகளின் கூடாரமாக

    ரவுடிகளின் கூடாரமாக

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்த இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகிறது. ஆரம்பம் முதலே ஆணித்தரமான கதைகளை மட்டுமே இயக்கி வந்த பா ரஞ்சித் அட்டக்கத்தி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியாகி வெற்றி பெற்ற பிறகு அதை அடுத்து மெட்ராஸை கதை களமாக கொண்டும் படங்களை தொடர்ந்து இயக்கி வந்தார். அந்த வகையில் இரண்டாவது படத்திலேயே இதுவரை தமிழ் சினிமாவில் ரவுடிகளின் கூடாரமாக காட்டிவந்த வடசென்னை பற்றிய எண்ணத்தை மாற்றும் வகையில் உண்மையான வடச்சென்னை இப்படித்தான் இருக்குமென காட்டி அனைவரிடத்திலும் பாராட்டுக்களை பெற்ற ரஞ்சித்துக்கு ஜாக்பாட் அடித்ததுபோல சூப்பர் ஸ்டாரை இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்கிய இரண்டே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரை இயக்கும் அளவிற்கு முன்னேறிய பா ரஞ்சித் முதல் முறையாக ரஜினிகாந்துடன் இணைந்த கபாலி திரைப்படம் மலேசியாவை கலக்கிய தமிழ் கேங்ஸ்டர் டானை பற்றிய படமாக வெளியானது.

    ரஜினிகாந்தின் நடிப்புக்கு முக்கியத்துவம்

    ரஜினிகாந்தின் நடிப்புக்கு முக்கியத்துவம்

    தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற கபாலி திரைப்படம் முதல் நாள் ஷோ வசூலே விண்ணைப் பிளந்தது. இந்த அளவிற்கு வெளியான அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தெறிக்காவிட்டாலும் இத்திரைப்படம் அனைத்து தப்பு ரசிகர்களையும் கவரவில்லை. ஏனெனில் வழக்கமான ரஜினிகாந்த் படங்களில் இருக்கும் மாஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் இந்த திரைப்படத்தில் இடம் பெறாமல் முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ரஜினிகாந்தின் முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இப்படம் உருவானது. கபாலி சுமாரான வெற்றியைப் பெற்று இருந்தாலும் ரஜினிகாந்த் பா ரஞ்சித் கூட்டணி மீண்டும் காலா படத்தில் இணைந்தது. இந்த முறை மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியை மையப்படுத்திய படமாக வெளியானது.

    சார்பட்டா பரம்பரை

    சார்பட்டா பரம்பரை

    கபாலி மற்றும் காலாவை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க சுமார் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்ட இயக்குனர் பா ரஞ்சித் இப்பொழுது தரமான திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். 1970களின் பிற்பகுதியில் வடசென்னையில் பிரபலமாகி இருந்த குத்துச் சண்டையை மையப்படுத்தி சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் கொரோனா சூழல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் நேரடியாக ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஹீரோவாக கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடித்து இருக்க , புதுவரவாக நடிகை துஷாரா விஜயன் இதில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பசுபதி,ஜான்விஜய்,அனுபமா, பிரியதர்ஷினி,கலையரசன்,ஜான் கொக்கேன்,சபீர், சந்தோஷ் பிரதாப், சஞ்சனா, தங்கதுரை என மிகப் பெரிய பட்டாளமே இதில் நடித்திருக்க படம் வேற லெவல் ரீச் ஆனது.

    டான்சிங் ரோஸ்

    டான்சிங் ரோஸ்

    இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான குத்துச்சண்டை திரைப்படங்களிலேயே சார்பட்டா பரம்பரை தனிச்சிறப்பை பெற்றிருக்க அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களுக்கு இணையாக துணை மற்றும் சிறிய கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெற்றுள்ளது . கெவின் டாடி, ரங்கன் வாத்தியார், வேம்புலி, டான்சிங் ரோஸ், பாக்கியம், வெற்றிச்செல்வன், மெஸ்ஸியம்மா, மாஞ்சா கண்ணன், என அனைத்து கதாபாத்திரங்களும் மிக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் நடித்த நடிகர்களும் கச்சிதமாக அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி இருந்தனர். குறிப்பாக இதில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகர் சபீர் ரசிகர்களின் தனி கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.

    திரையரங்கில் வெளியிட

    திரையரங்கில் வெளியிட

    ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்கள் முண்டியடித்து சார்பட்டா பரம்பரை படத்தை கண்டு ரசித்த நிலையில் பார்த்த அனைவரும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கலாம் என சிறு மன வருத்தத்துடன் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு நற்செய்தி அளிக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட உள்ளதால் தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை வெளியிட வரிசைகட்டி நிற்கின்றனர். அந்த வகையில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தையும் திரையரங்கில் வெளியிட படக்குழு தீவிரமாக முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக இருக்க இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பெரும் ஆவலுடன் சார்பட்டா பரம்பரை படத்தை பெரிய திரையில் விசிலடித்து கொண்டாட ஆவலுடன் உள்ளனர்.

    English summary
    sarpatta parambarai movie will release again in theaters fans happy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X