சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் நாகேஷ்...வைரலாகும் வீடியோ

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா நடித்த இந்த படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.

Sarpatta Parambarai Nagesh version video goes viral

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர்களின் நிஜப் பெயர்கள் மறந்து, கேரக்டர்களை வைத்தே அவர்களை கூப்பிடும் அளவிற்கு இந்த படம் பிரபலமாகி விட்டது.

சர்பட்டா பரம்பரைக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் பாக்ஸிங் தொடர்பான கதை இது. 1970 களில் நடப்பது போல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என யாரை பார்த்தாலும் சார்பட்டா பரம்பரை படம் பற்றி தான் பேசுகிறார்கள்.

இந்நிலையில் 1970 களில் வெளியான படம் ஒன்றில் பழம்பெரும் நடிகர் நாகேஷ், சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்கள் நடுத்தெருவில் சண்டையிடும் போது அதற்கு கமெண்ட்ரி கொடுத்து, ஒருவர் சார்பட்டா பரம்பரை, மற்றவர் இடியாப்ப பரம்பரை என கூறுகிறார்.

இந்த சண்டையை உட்கார்ந்து வேடிக்கை பார்க்க 10 பைசா, நின்று கொண்டே பார்க்க 5 பைசா எனவும் டிக்கெட் போட்டு வசூலிக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது. சார்பட்டா பரம்பரை படத்திற்கு இது நல்ல விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X