Don't Miss!
- Lifestyle
பெற்றோர்களே! நீங்க உங்க குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் விதம் அவங்க வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Finance
Spotify-ஐயும் விட்டு வைக்காத 'ரெசிஷன்' வைரஸ்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- News
தேர்வு நெருங்குகிறது.. ஹிஜாப் அணிய அனுமதி கொடுங்கள் - உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனு
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ஒஸ்தி, வீரம் படத்துலயே நடிச்சிருக்காரா? சார்பட்டா பரம்பரை வேம்புலியின் வேறலெவல் டிரான்ஸ்ஃபர்மேஷன்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை.
இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஆப்போஸிட்டாக பாக்ஸிங் பண்ணும் வேம்புலிக்கும் தனியாக ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
பிரபல விஜே பூஜாவின் கணவரான ஜான் கோக்கன் வேம்புலியாக நடிப்பதற்கு முன்பாக நடித்துள்ள படங்கள் மற்றும் அவரது டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் அடுத்த பிரம்மாண்டம்.. ஹீரோயின் யாரு தெரியுமா?

வேம்புலிக்கு வெற்றி
அடியாள் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் ஜான் கோக்கன் வேம்புலியாக விஸ்வரூப வளர்ச்சியை சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அடைந்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித் ஜான் கோக்கனின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரத்தை கொடுத்து வேம்புலியாக வெற்றி மகுடத்தை சூட்டி உள்ளார்.

ஆஜானபாகு
ஆள் பார்க்க சும்மா ஹைட்டும் வெயிட்டுமா ஆஜானபாகுவாக மிரட்டுகிறார். இவரும் இவரது மனைவியான எஸ்.எஸ். மியூசிக் விஜே பூஜா ராம்சந்திரனும் இணைந்து வெளியிடும் வொர்க்கவுட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

ஒஸ்தி படத்தில்
கடந்த 2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லவ் இன் சிங்கப்பூர் படத்தின் மூலம் சினிமாவுக்குள் சிறிய வேடத்தில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் ஜான் கோக்கன். 2011ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் சாதாரண அடியாள் கதாபாத்திரத்தில் அடையாளமே தெரியாத நபராகவும் இவர் நடித்துள்ளார்.

அஜித்தின் வீரம்
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்த நடிகர் ஜான் கோக்கன் இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் வில்லன் ஆடலரசுவின் வலது கரமாக அப்கிரேட் ஆகி நடித்திருந்தார். வீரம் படத்திற்கு பிறகு இவர் நடித்த தமிழ் படம் என்றால் அது சார்பட்டா பரம்பரை தான் என்பது நிச்சயமாகவே மிகப்பெரிய வளர்ச்சி என்று பார்க்கப்படுகிறது.

அஜித் அட்வைஸ்
வாழ்க்கை என்பது அப்ஸ் அண்ட் டவுன்ஸ் நிறைந்தது தான். உனக்கான நேரம் வரும் அது வரை உனது இலக்கை நோக்கி சென்று கொண்டே இரு.. நிச்சயம் ஒரு நாள் உனது லட்சியத்தை அடைவாய் என வீரம் படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித் தந்த அட்வைஸ் தான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது என சமீபத்தில் இவர் வெளியிட்ட ட்வீட் அஜித் ரசிகர்களை கொண்டாட செய்தது.

கேஜிஎஃப் படத்திலும்
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்திலும் நடிகர் ஜான் கோக்கன் வில்லன் ஆளாக நடித்துள்ளார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு சார்பட்டா பரம்பரையின் வேம்புலி கதாபாத்திரம் தான் மிகப்பெரிய ரோலாக அமைந்து பேரும் புகழும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

டிரான்ஸ்ஃபர்மேஷன்
இந்நிலையில், ஒஸ்தி, வீரம் மற்றும் சார்பட்டா பரம்பரை என தான் நடித்த மூன்று தமிழ் படங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு தனது வேற லெவல் டிரான்ஸ்ஃபர்மேஷனை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காண்பித்து கூஸ் பம்ப்ஸ் கொடுத்து வருகிறார் நம்ம வேம்புலி ஜான் கோக்கன்.

டான்ஸிங் ரோஸ் உடன்
ஆர்யாவின் கபிலன் கதாபாத்திரம் ஷபீரின் டான்ஸிங் ரோஸ், ஜான் கோக்கனின் வேம்புலி, பசுபதியின் ரங்கத் வாத்தியார், பீடி தாத்தா என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாகி உள்ளது. டான்ஸிங் ரோஸ் உடன் இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் ஸ்டில்லையும் பதிவிட்டு இவர் போட்ட ட்வீட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மொத்த பரம்பரையும்
சார்பட்டா மற்றும் இடியாப்ப பரம்பரை என சார்பட்டா பரம்பரையின் முக்கிய நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட க்ரூப் செல்ஃபியையும் பதிவிட்டு இவர்களுடன் இணைந்து நடிக்கும் அனுபவம் ஏகப்பட்ட பாடங்களை கொடுத்ததாக நடிகர் ஜான் கோக்கன் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பீம்ஜிக்கு நன்றி
வேம்புலி கதாபாத்திரத்திற்கு நான் கச்சிதமாக பொருந்துவேன் என என் மீது முழு நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு எவ்ளோ நன்றி சொல்றதுன்னே தெரியல.. அவரால் தான் இப்படியொரு படம் எனக்கு சாத்தியமானது என்று பா. ரஞ்சித்துக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தனது நன்றிகளையும் ஜான் கோக்கன் தெரிவித்துள்ளார்.

பூஜா ஹாப்பி
பிரபல விஜேவும் நடிகையுமான பூஜா ராமசந்திரன் கணவர் ஜான் கோக்கன் உடன் இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்களை வெளியிட்டு அவர் ஒரு பக்கம் வைரலாக்கி வருகிறார். ஜான் கோக்கனுக்கு வேம்புலி கதாபாத்திரம் கிடைத்ததற்கும் அதனை சரியாக அவர் செய்து பாராட்டு மழையில் நனைந்து வருவதையும் பார்த்து நடிகை பூஜா ராமசந்திரன் ரொம்பவே ஹாப்பி ஆகி உள்ளார்.

புது வில்லன்
தமிழ் சினிமாவுக்கு ஹைட்டும் வெயிட்டுமா புது வில்லன் கிடைச்சிருக்காரு என ஏகப்பட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றி நிச்சயம் நடிகர் ஜான் கோக்கனுக்கு ஏகப்பட்ட படங்கள் கிடைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். வேம்புலிக்கு இனி எல்லாமே சக்சஸ் தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.