For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நாங்க வேற மாதிரி பாடலுக்கு இறங்கி குத்திய ‘வேம்புலி’…. வைரலாகும் வீடியோ !

  |

  சென்னை : சார்ப்பட்டா பரம்பரை படத்தின் வேம்புலி ஜான் கோக்கேன் தாறுமாறாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Sarpatta shootingல Ranjith இப்படி தான் இருப்பாரு | Vembhuli, Vetri, Raman

  மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  அரிய நோயினால் அவதிப்படும் ஜெசிகாவை காப்பாற்ற உதவுங்கள் ப்ளீஸ்

  பாகுபலி, கே.ஜி.எஃப், வீரம், லக்ஷமணா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

   என்னது நான் செத்து போயிட்டேனா.. தீயாய் பரவிய தகவல்.. கடுப்பான ரஜினி பட நடிகை.. பரபர விளக்கம்! என்னது நான் செத்து போயிட்டேனா.. தீயாய் பரவிய தகவல்.. கடுப்பான ரஜினி பட நடிகை.. பரபர விளக்கம்!

  சார்ப்பட்டா

  சார்ப்பட்டா

  பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. ஆர்யா, துஷாரா, பசுபதி, ஜான் கோக்கேன், கலையரசன், சந்தோஷ்பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ஆர்யா. இந்த படத்திற்காக உடலை முறுக்கேற்றி மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்.

  வேம்புலி

  வேம்புலி

  இப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜான் கோக்கேன், ஒரு பாக்சருக்கு உண்டான அத்தனை மேனரிசமும் இவரிடம் காணப்பட்டது. ஆர்யாவிடம் அடிவாங்கி தோற்கும் காட்சியிலும், ஆர்யாவை அடிந்து நொறுக்கும் போதும் மிகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஜான் கோகேன்.

  பிரிந்தனர்

  பிரிந்தனர்

  40 வயதான ஜான் கோக்கேன் 2012ம் ஆண்டு மீரா வாசுதேவனை திருமணம் செய்து கொண்டார். இவர், உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, ஆட்ட நாயகன் கடைசியாக அடங்கமறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

  பூஜா ராமச்சந்திரனை 2வது திருமணம்

  பூஜா ராமச்சந்திரனை 2வது திருமணம்

  இதையடுத்து, இரண்டாவதாக பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொகுப்பாளினியான பூஜா, காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். இதையடுத்து, பீசா, காஞ்சனா 2, ஒரே ஞாபகம், களம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக அர்ஜூன் தாஸ் நடித்த அந்தகாரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

  கணவருடன் செஃல்பி

  கணவருடன் செஃல்பி

  இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாகவே இருக்கும் இவர்கள் அவ்வப்போது,ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து செஃல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் செம வைரலானது.

  நாங்க வேறமாறி

  நாங்க வேறமாறி

  தல அஜித் மீது மிகுந்த அன்பு கொண்ட ஜான் கோக்கேன், சார்பட்டா பரம்பரை படத்தின் வேம்புலி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை அஜித்துக்கு சமர்ப்பிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். தல அஜித்தின் தீவிர ரசிகரான இவர், வலிமை படத்திலிருந்து தற்போது வெளியாகி உள்ள, நாங்க வேறமாறி பாடலுக்கு செம கலக்கலாக ஆட்டம் போட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் வேம்புலி அண்ணேன், பாக்ஸிங் மட்டுமில்ல டான்ஸ்லையும் சும்மா கலக்குறீங்க போங்க என்று ஜான் கோக்கேனை பாராட்டி வருகின்றனர்.

  குவியும் லைக்குகள்

  தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தில் வரும் நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் குரலில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் யுவன் சங்கர் ராஜாவின் கம்போசிங் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது என்பதும் இந்த பாடலை பார்க்கும் போது ஒரு திருவிழா காட்சி போல உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  English summary
  John Kokken, who played the role of a boxer, Vembuli in Sarpatta Parambarai has shared Nanga vera maari dance video on instagram.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X