டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ராஜீவ்மேனனின் "சர்வம் தாளமயம்"!

சர்வம் தாளமயம் திரைப்படம் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

சென்னை: ராஜீவ் மேனன் இயக்கியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன். தற்போது ஜீ.வி.பிரகாஷை நாயகனாக வைத்து, சர்வம் தாளமயம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

“Sarvam Thaalamayam” at the 31st Tokyo International Film Festival

புகழ்பெற்ற மிருதங்க வித்வான் ஒருவரிடமிருந்து அந்த கலையை கற்று கொள்ள விரும்புகிறான் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஆனால் அந்த இளைஞன் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால், அவனுக்கு மிருதங்கம் கற்றுத்தர மறுக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சினைகளை கடந்து, அந்த இளைஞனின் கனவு எப்படி நிறைவேறுகிறது என்பதே படத்தின் கதை.

“Sarvam Thaalamayam” at the 31st Tokyo International Film Festival

இந்த படத்துக்காக ஏ.ஆர்.ரஹமான் கவித்துவமாக இசையமைத்துள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படம் தற்போது 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது.

“Sarvam Thaalamayam” at the 31st Tokyo International Film Festival

ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், திவ்ய தர்ஷிணி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X