மஹா சமுத்திரம் புது போஸ்டருடன் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் சர்வானந்த்!

ஹைதராபாத் : தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சர்வானந்த்.

இவர் தமிழில் எங்கேயும் எப்போதும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இப்பொழுது சித்தார்த்,அனு இமானுவேல், அதிதி ராவ் ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் மஹா சமுத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை அட்டகாசமான போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்.

பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் அஜய் பூபதி. கார்த்திகேயா, பாயல் ராஜ்புட் ஆகியோரின் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. இதில் நடிகர் ராம்கி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மஹா சமுத்திரம்

மஹா சமுத்திரம்

முதல் படத்திலேயே அடிச்சி தூக்கிய அஜய் பூபதியின் அடுத்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க இப்பொழுது சர்வானந்த், சித்தார்த், அனு இம்மானுவேல், அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் மஹா சமுத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.

புதிய திரைப்படத்தில்

புதிய திரைப்படத்தில்

இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சர்வானந்த் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர். சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் இவர்தான் ஹீரோவாக நடித்திருந்தார். இப்பொழுது சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இருவரும் உற்சாகமாக வெற்றிக்குறி

இருவரும் உற்சாகமாக வெற்றிக்குறி

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது என செம குஷியாக புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் சர்வானந்த் மற்றும் சித்தார்த் இருவரும் உற்சாகமாக வெற்றிக்குறி காட்டிக்கொண்டு நடனமாடியவாறு உள்ளனர். இந்த வருட இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X