ஆயுத பூஜை பண்டிகையில் வெளியாகும் சசிகுமாரின் ராஜவம்சம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சென்னை : நடிகர் சசிகுமார் இயக்குனராக இருந்து இப்பொழுது நடிகராக அடுத்தடுத்து அதிரடி படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறார்.

மூன்றுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்க இயக்குனர் கே வி கதிர்வேலு இயக்கத்தில் ராஜவம்சம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருந்த ராஜ வம்சம் திரைப்படம் ஆயுதபூஜை பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முழுநேர நடிகராக

முழுநேர நடிகராக

தமிழ் மண்ணிற்கு ஏற்ற முகம் அலட்டிக் கொள்ளாத நடிப்பு என தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சசிகுமார் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார் அதன் பிறகு முழுநேர நடிகராக மாறி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

நட்பை மையப்படுத்திய படங்களில்

நட்பை மையப்படுத்திய படங்களில்

குறிப்பாக இவரது நடிப்பில் வரும் திரைப்படங்கள் நட்பை மையப்படுத்திய படங்களாக வெளிவர ரசிகர்களுக்கு ஏற்றார்போல் நட்பை மையப்படுத்திய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோவாக அடுத்தடுத்த படத்தில் சசிகுமார் நடித்து வந்தாலும் கொரோனா சூழல் காரணமாக இவரது படங்கள் வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

கூட்டுக் குடும்பத்தை பற்றி

கூட்டுக் குடும்பத்தை பற்றி

அந்த வகையில் இயக்குனர் கேவி கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ராஜவம்சம். இயக்குனர் சுந்தர் சி இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கேவி கதிர்வேலு இயக்கியுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கூட்டுக் குடும்பத்தை பற்றிய படமாக உருவாகியுள்ளது. மூத்த நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி,ராஜ்கபூர்,தம்பி ராமையா, மனோபாலா, சதீஷ், ரமேஷ் கண்ணா ,சிங்கம்புலி,யோகிபாபு, கும்கி அஸ்வினி என கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

அக்டோபர் 14

அக்டோபர் 14

ராஜ வம்சம் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படக்குழு ராஜவம்சம் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்து உள்ளது. அதன்படி அடுத்த வரும் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 14-ஆம் தேதி ராஜவம்சம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X