Vijay - சசிகலா மிரட்டியதால்தான் அந்தப் படத்தில் நடித்தார் விஜய்.. அந்தணன் கொடுத்த ஷாக் நியூஸ்

சென்னை: Vijay (விஜய்) சசிகலா மிரட்டியதால் தான் விஜய் ஒரு படத்தில் நடித்ததாக அந்தணன் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படம் விஜய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வந்த பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக கடுமையான ட்ரோல்களை சந்தித்தன. எனவே இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.

 Sasikala threatened Vijay and thats why he acted in Vaseegara Says Anthanan

விஜய் 68: லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார்.அதனை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பூஜை விரைவில் போடப்பட்டு லியோ ரிலீஸுக்கு பிறகு ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. மேலும் இதுகுறித்த அப்டேட்டுகளும் லியோ ரிலீஸுக்கு பிறகே வரும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் விஜய்: இந்தச் சூழலில் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படம் வெளியானது. எனவே இது சைன்ஸ் பிக்‌ஷன் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். ஸ்கேனை முடித்துவிட்டு தி ஈக்வலைஸர் 3 படத்தை விஜய் பார்க்கும் புகைப்படத்தையும் வெங்கட் பிரபு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை: இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறார் என்றும்; அதில் ஒன்று வயதான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த வயதான விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க முதலில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அதற்கு ஜோதிகா ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. அவரை அடுத்து சிம்ரனுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய கடைசியாக சினேகாவை அந்த கேரக்டருக்கு லாக் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிரட்டப்பட்ட விஜய்: இந்தப் படத்தில் சினேகா நடிக்கும்பட்சத்தில் 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் இரண்டு பேரும் கடைசியாக 2003ஆம் ஆண்டு வெளியான வசீகரா படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் வசீகரா படத்தில் நடிக்க வேண்டும் என விஜய்யை சசிகலா மிரட்டியதாக அந்தணன் கூறியிருக்கிறார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில் பேசுகையில், ''போயஸ் கார்டனில் இருந்து விஜய்யிடம் கால்ஷீட் கேட்டார்கள். அதற்கு விஜய் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் சசிகலா கேட்கிறார். அதனால் நீங்கள் உடனே கால்ஷீட் கொடுக்கத்தான் வேண்டும் என மிரட்டித்தான் வசீகராவில் விஜய்யை நடிக்க வைத்தார்கள் என்று அந்தப் படம் வெளியானபோது பல செய்திகள் உலாவின" என்றார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X