முதல் நாள்ல இருந்து இப்போ வர தனுசுடன் அற்புதமான பயனம்- சசிகாந்த்

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயகத்ததில் உருவாகி வரும் படம் தான் தனுஷ் 40.

இந்த படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை படக்குழு இனிமேல் தான் வெளியிட உள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் அதிகமாக நடந்து வந்த லண்டன் ஷெடியூல் முடிந்து சென்னை வந்த படக்குழு இங்கு உள்ள படப்பிடிப்பையும் முடித்து உள்ளது .

sasikanth completes danush 40

மேலும் மொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு படப்பிடிப்பின் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறது. தற்போது படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் படத்தை பற்றியும் நடிகர் தனுசை பற்றியும் ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

இதில் 'டி'யின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது. முதல் நாள் முதல் தற்போது வரையிலும் ஒரு அற்புதமான பயனம் ஏற்பட்டுள்ளது. உங்களின் தனித்துவம் மிக்க படத்திற்கான உழைப்பு அசாத்தியமானது. இந்த வாய்ப்பை தந்ததற்கும் நட்புக்கும் நன்றி என்று நடிகர் தனுசை பற்றி கூறியிருக்கிறார் சசிகாந்த் .

sasikanth completes danush 40

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் ஒரு தரமான தயாரிப்பாளர், அவர் பல நல்ல படங்களை தயாரித்துள்ளார். 2010ல் தமிழ் படம் மூலம் தயாரிப்பை துவங்கிய ஒய் நாட் ஸ்டூடியோஸ் பின் வா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவிய தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ,தமிழ் படம் 2,கேம் ஓவர் படங்கள் வரை தயாரித்து உள்ளனர் .

தயாரிப்பு ரீதியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது ஒரு சின்ன தவறு படத்தை கவிழ்த்து விடும் அதனால் மிகுந்த கவனத்தில் படத்தை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.

சசிகாந்த் காவியதலைவன் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் சிறிய பட்ஜட்டில் தயாரித்து இருந்தார் இருந்தும் படம் வெளியான தேதி சரியில்லாததால் படம் தோல்வி அடைந்தது. இதனால் அந்த படத்திற்கு பின் படங்களை மிக கவனமான முறையில் தயாரிக்கிறார். தற்போது தனுஷ் 40,பின் யோகி பாபுவின் 'மண்டேலா' ,சமுத்திரகனியின் 'ஆலே' படங்களை தயாரித்து வருகிறார் சசிகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X