சசிகுமாருடன் இணையும் எஸ் பி சௌத்ரி.. கசிந்தது செம அப்டேட்!
சென்னை : சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான டகால்டி திரைப்படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி
முதல் படத்திலேயே வெற்றி தயாரிப்பாளர் என்ற பெயரைப் பெற்ற இவர் அடுத்து யாருடன் இணையப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது சூப்பர் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.
தீபாவளிக்கு பல அப்டேட்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி இப்பொழுது நண்பர்கள் திரைப்படத்திற்கு பெயர் போன பிரபல நடிகருடன் இணைய உள்ளார்.

வெற்றிகரமாக ஹீரோ
தொலைக்காட்சியில் காமெடி நடிகராயாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகர் சந்தானம் இப்பொழுது திரையில் வெற்றிகரமாக ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவுன்டர்களை அள்ளி வீசி
ஏற்கனவே பலர் தொலைக்காட்சிகளில் இருந்து திரைப்படங்களில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் காமெடி நடிகராக திரைப்படங்களில் வலம் வந்து ஹீரோக்களுடன் செம ஜாலியாக கவுன்டர்களை அள்ளி வீசி முன்னணி காமெடி நடிகராக முன்னேறிய சந்தானம் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக மாஸ் காட்டி வருகிறார்.

தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி
இந்நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சந்தானம் நடிப்பில் கலகலப்பான காமெடி, காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்ற "டகால்டி" திரைப்படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி இப்பொழுது புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளார்.

எந்த ஹீரோவுடன் இணையவார்
டகால்டி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி எந்த ஹீரோவுடன் இணையவார் என்பதை பற்றி தமிழ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்த நிலையில் இப்போது சூப்பரான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

மாஸ்டர் டீஸர்
ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப் படங்கள் வெளியானதை அடுத்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ஈஸ்வரன் மற்றும் மாஸ்டர் படத்தின் டீஸர்களும் இன்று வெளியாகி உள்ள நிலையில், தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அப்டேட் ஒன்றை கொடுக்கவுள்ளார்.

எஸ் பி சௌத்ரியுடன் இணைந்து
நட்பை மையமாகக்கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு பெயர்போன நடிகர் சசிகுமார் இப்பொழுது கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வர, அதைத் தொடர்ந்து டகால்டி படத்தின் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரியுடன் முதல்முறையாக இணைய உள்ளார். இவ்வாறு இருவரும் தங்களது அடுத்த வெற்றியை தீர்மானித்துள்ள நிலையில் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிலும் இது ஒரு பக்கா கமர்ஷியல் திரைப்படம் எனவும் பிரபல இயக்குனர் ஒருவர் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார் எனவும் சொல்லப்படும் நிலையில் இதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











