யோவ்.. டபுள் மீனிங்கில பேசாதய்யா.. சசிக்குமார் பதறல்!
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் ஆக்ஷ்ன், சென்டிமென்ட், காதல் என்று குடும்ப படமாக உருவாகியிருக்கும் படம் தான் ராஜவம்சம். இந்த படத்தை கே.வி.கதிர்வேலு இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது .படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் சாம்.சி.எஸ். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய சசிகுமார் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார்.

நல்ல கதை
அவர் பேசுகையில், இந்த படம் கதை கேட்டவுடன் பிடித்து விட்டது ஆனால் படத்தில் மொத்தம் 40 முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பதனால். நான் கதை கேட்டவுடன் தயாரிப்பாளரிடம் இந்த கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை புது முகங்ககளாக தேர்ந்தெடுத்து கொள்ளலாம் அது தான் எந்த பிரச்சினையும் இல்லாமல் படத்தை எளிதில் முடிக்க உதவும் என்று கூறினேன் என்று விழாவில் பகிர்ந்தார்.

முழுமையான படம்
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ராஜா வேண்டாம் இயக்குனர் கேட்கும் கதாபாத்திரங்களை வைத்து படம் எடுத்தால் தான் முழுமையான குடுமம்ப படமாக அமையும் என்றாராம் .இதனால் தான் தற்போது ராஜவம்சம் படம் ஒரு முழு குடும்ப படமாக வந்திருக்கிறது என்று கூறினார் சசிகுமார். இந்த படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் ராஜ் கபூர் முக்கிய வேடத்தில் சசிகுமாருடன் நடித்து இருக்கிறார்.

சசிக்குமார்
இவர் சசிகுமாரின் கிடாரி படத்திலேயே முக்கிய வேடத்தில் நடிக்க நேரிட்டதாம் ஆனால் அந்த சமயத்தில் சசிகுமார் தான் இந்த கதாபாத்திரத்திற்கு ராஜ்கபூர் சரியாக இருக்க மாட்டார் என்று இயக்குனரிடம் கூறியதாகவும் ஆனால் தற்போது இந்த உண்மையை ராஜ்கபூரிடம் கூறிவிட்டதாகவும் கூறினார்
இந்த படத்தில் நடிகர் சதீஷ் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

டபுள் சதீஷ்
இவர் படப்பிடிப்பின் போது எல்லா நேரங்களிலும் டபுள் மீனிங் வசனமாக பேசி கொண்டிருப்பாராம் சசிகுமார் தான் 'யோ சதீஷு இது குடும்ப படம்யா' இதலாம் வேணாம் என்று கண்டித்தார் என்று இசை வெளியீட்டின் போது கூறப்பட்டது. ராஜவம்சம் படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ளது .படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் 40 பேர் நடித்து இருக்கிறார்களாம். மிக பெரிய குடும்ப படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது .படப்பிடிப்பு முடித்த பின்பு எங்களால் யாரையும் பிரிய முடிய வில்லை அந்த அளவுக்கு நாங்கள் ஒரு குடும்பமாக நடித்தோம் ஒன்று படக்குழுவினர் கூறினார்கள்.


Click it and Unblock the Notifications











