வாணி போஜன், பிந்து மாதவி.. 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தில் சசிகுமாருக்கு 2 ஹீரோயின்!

By

சென்னை: நடிகர் சசிகுமார் அடுத்து நடிக்கும் படத்துக்கு பகைவனுக்கு அருள்வாய் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

கொரோனா பரவலுக்குப் பிறகு சினிமாதுறை மீண்டும் பரபரப்பாகி வருகிறது. பட பூஜை தொடர்ந்து நடந்து வருகின்றன.

நடிகர் சசிகுமார் இப்போது நான்கைந்து படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இந்தப் படங்கள் ஒவ்வொன்றாக இப்போது தொடங்குகின்றன.

கொம்பு வச்ச சிங்கம்டா

கொம்பு வச்ச சிங்கம்டா

அவர், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இதில் மடோனா செபாஸ்டியன், சூரி, ஹரீஷ் பெரடி, துளசி, தீபா ராமனுஜம், தயாரிப்பாளர் இந்தர்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் மகன்

எம்.ஜி.ஆர் மகன்

அடுத்து பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது. ஸ்கிரீன்சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அந்தோணிதாசன் இசையமைத்திருக்கிறார்.

பகைவனுக்கு அருள்வாய்

பகைவனுக்கு அருள்வாய்

இந்தப் படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதையடுத்து ராஜவம்சம், சரத்குமாருடன் நடித்துள்ள நா நா ஆகிய படங்களும் இருக்கின்றன. இதற்கிடையில் அவர் 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது.

Recommended Video

Dalgona Coffee Challenge | Quarantine | Aiswarya Rajesh | Vani Bhojan | Swarnamalya
4 மங்கிஸ் ஸ்டூடியோ

4 மங்கிஸ் ஸ்டூடியோ

இதை, திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கூர்கா படத்தை தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டூடியோ இதை தயாரிக்கிறது. இதில் சசிகுமார் ஜோடியாக, வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். நடிகர்கள் நாசர், சதிஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கார்த்திக் கே ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X