திமுக, அதிமுக முதல் தவெக வரை ஒரு கட்சியையும் விடாத சசிகுமாரின் மை லார்ட்.. மிரட்டி விடும் டிரைலர்!

சென்னை: சசிகுமார் நடிக்கிறார் என்றாலே குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கலாம் என்ற நம்பகத்தன்மையை அவரது தொடக்க காலத்தில் இருந்து ஏற்படுத்தி வருகிறார். அது கடந்த சில ஆண்டுகளில் பெரும் அளவில் வணிக வெற்றியையும் ஈட்டி வருகிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி உள்ள படமான மை லார்ட் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமாரின் ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சசிகுமார், சைத்ரா ஆச்சர், குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார் என பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படமான ஜிப்ஸி படத்தையும் திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமாரின் ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தான் தயாரித்தது.

Sasikumar Chaithra J Achar Raju Murugan My Lord Movie Trailer Receives Good Response From Fans

மை லார்ட் டிரைலர்: இப்படி இருக்கையில் இவர்கள் கூட்டணியில் உருவாகி உள்ள மை லார்ட் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுவும் ராஜு முருகன் என்றாலே பொலிட்டிகல் டிராமாவாகத்தான் இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம். அப்படி இருக்கையில் இந்த படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது தனது வழக்கமான பொலிட்டிகல் சட்டயர் டிராமாவில் படத்தை மிரட்டி விட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு விளாசல்: அந்த வரிசையில் மை லார்ட் படத்தின் டிரைலரும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் தொடங்கி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரை எல்லா கட்சியினரையும் விமர்சித்து வசனங்களும் காட்சிகளும் வைத்துள்ளார் என்பது டிரைலரைப் பார்க்கும்போதே தெரிகிறது. மேலும் படத்தில் கிட்னி திருட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாமானியர்களின் அன்றாட போராட்ட வாழ்க்கை என மொத்த படமும் அனைத்து கட்சிகளையும் விளாசித் தள்ளி உள்ளது என்று ரசிகர்கள் பலரும் டிரைலரை பார்த்து பாராட்டி வருகிறார்கள். மேலும் நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ராவின் காம்போ நன்றாக இருப்பதுடன் அவர்களுக்கான மேக்-அப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sasikumar Chaithra J Achar Raju Murugan My Lord Movie Trailer Receives Good Response From Fans

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X