மிஸ் உத்தரகாண்ட்டுடன் ஸ்விஸ் போய் கை காலை ஆட்டப் போகும் சசிக்குமார்!

By Sudha

சென்னை: தமிழகத்தைத் தாண்டி இதுவரை டான்ஸ் ஆடிப் பழக்கமில்லாத இயக்குநர் சசிக்குமார் முதல் முறையாக சுவிட்சர்லாந்து வரை ஒரு நடை போய் வரப் போகிறாராம் ... பிரம்மன் படத்தின் பாடல் காட்சிக்கு ஆடுவதற்காக.

கமல்ஹாசனின் உதவியாளரான சாக்ரடீஸ் இயக்கும் பிரம்மன் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ஜோடி போட்டிருப்பவர் லாவண்யா திரிபாதி.

இருவரும் விரைவில் சுவிட்சர்லாந்து பறக்கவுள்ளனர். அங்கு வைத்து பாடல் காட்சியைப் படமாக்கவுள்ளனராம்.

குட்டிப்புலிக்குப் பிறகு

குட்டிப்புலிக்குப் பிறகு

குட்டிப்புலி படத்தில் கதை நாயகனாக நடித்த சசிக்குமார் தற்போது பிரம்மன் படத்திலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய சரிபாதியாக லாவண்யா திரிபாதி

அவருடைய சரிபாதியாக லாவண்யா திரிபாதி

அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் லாவண்யா திரிபாதி.

கோவையில்.. சென்னையில் ஷூட்டிங்

கோவையில்.. சென்னையில் ஷூட்டிங்

இப்படத்தின் காட்சிகளை முதலில் கோவையிலும், பி்ன்னர் சென்னையிலுமாக வைத்து படமாக்கினர்.

2 பாட்டுக்காக சுவிஸ் பயணம்

2 பாட்டுக்காக சுவிஸ் பயணம்

அடுத்து 2 பாடல் காட்சிகளை சுவிட்சர்லாந்தில் சுடவுள்ளனர். இதற்காக சசிக்குமார், லாவண்யா, டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் ஆகியோருடன் 20 பேர் கொண்ட குழு சுவிஸ் போகவுள்ளது.

உத்தரகாண்டிலிருந்து லாவண்யா

உத்தரகாண்டிலிருந்து லாவண்யா

வழக்கமாக மும்பை, கேரளா, ஆந்திரா, டெல்லி என்றுதான் ஹீரோயின்கள் கிளம்பி வருவார்கள். ஆனால் ஒரு வித்தியாசமாக உத்தராகண்ட்டிலிருந்து வந்துள்ளார் லாவண்யா.

மிஸ் உத்தரகாண்ட்

மிஸ் உத்தரகாண்ட்

லாவண்யா, மிஸ் உத்தரகாண்ட் பட்டத்தை 2006ம் ஆண்டு வென்ற அழகி ஆவார். மாடலிங்தான் இவரது முதன்மைத் தொழிலாக இருந்துள்ளது.

அப்பா வக்கீல்.. அம்மா டீச்சர்

அப்பா வக்கீல்.. அம்மா டீச்சர்

இவரது அப்பா வக்கீ்லாம், அம்மா ஆசிரியையாவார். ஒரு அண்ணன், அக்காவும் உண்டாம் திரிபாதிக்கு.

முதல்ல டிவி.. அப்புறம் சினிமா

முதல்ல டிவி.. அப்புறம் சினிமா

லாவண்யா ஆரம்பத்தில் டிவியில்தான் நடித்துக் கொண்டிருந்தார்.. அதாவது இவர் ஒரு சீரியல் நடிகை... பிறகுதான் 2012ம் ஆண்டு தெலுங்கில் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து சினிமா நடிகையானார். 2 படங்கள் நடித்துள்ளாராம் தெலுங்கில். தமிழில் இதுதான் முதல் படமாம்.

நடிப்போடு கவர்ச்சியும்

நடிப்போடு கவர்ச்சியும்

கதைக்குத் தேவையானால் கவர்ச்சியும் சம்மதம்... என்ற நடிகையரின் கொள்கையுடன் லாவண்யாவும் இருக்கிறார். பிரம்மன் படத்தில் இவருக்கு நல்ல ரோலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X