#Petta படப்பிடிப்பில் ரஜினியால் வருத்தப்பட்ட சசிகுமார்
சென்னை: பேட்ட படப்பிடிப்பு முடிந்தபோது வருத்தமாக இருந்ததாக நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.
பேட்ட இசை வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் கலந்து கொண்டு பேசினார். திரையில் பார்த்த ரஜினியுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,

வருத்தம்
நான் அவருடன் 20 நாட்கள் வேலை செய்தேன். என்னடா படப்பிடிப்பு அதற்குள் முடிகிறதே என்று வருத்தமாக இருந்தது. அவர் மிகவும் சாதாரணமாக இருப்பார். எளிமையான மனிதர். அவர் தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் தெரிவித்தார். அவர் எளிதில் இந்த இடத்திற்கு வரவில்லை. அவரின் அர்ப்பணிப்பு தான் காரணம்.

ஸ்டைல்
எனக்கு டான்ஸ் வராது என்று அவர் சொல்வார். ஆனால் அது பொய் என்று எங்களுக்கு தெரியும். நாம் பயந்துவிடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்வார். நீங்க தான் டான்ஸில் பெஸ்ட் சார். அனைவரும் உங்கள் ஸ்டைலை பார்த்து தான் ஆடுகிறோம். படப்பிடிப்பு தளத்தில் அவர் கேரவனுக்குள் இருக்க மாட்டார். அவர் உடை மாற்றக் கூட கேரவனுக்குள் செல்ல மாட்டார்.

கார்த்திக் சுப்புராஜ்
ஒரு ரசிகர் படத்தை எடுத்தது போன்று இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்துள்ளார். நீங்கள் படங்களை நிறுத்தாமல் தொடர்ந்து நடிக்க வேண்டும். அமிதாப் பச்சன் சார் போன்று நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றார் சசிகுமார். என்னை சந்தேகப்படுறியா தேவா என்று தளபதி பட வசனத்தை பேசிக் காட்டினார் சசிகுமார்.

படங்கள்
முழு நேர அரசியலில் ஈடுபடுவதால் இந்தியன் 2 படத்தோடு படங்களில் நடிப்பதை நிறுத்தப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். அவரை போன்று ரஜினியும் கூறிவிடக் கூடாதே என்று தான் அவரின் ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இந்நிலையில் தான் சசிகுமார் ரஜினியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











