Freedom Trailer: சசிகுமாருக்கு அடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி ரெடியா?.. ஃப்ரீடம் டிரெய்லர் எப்படி இருக்கு?
சென்னை: நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக்கொண்டு உள்ளார். அயோத்தி படம் தொடங்கி இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக மட்டுமல்லாமல், தரமான சமூக கருத்துக்களை கொண்ட படமாகவும் உள்ளது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி, இடையில் வெளியான படங்களான கருடன் மற்றும் நந்தன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் சசிக்குமாரின் மகுடத்தை அலங்கரிக்கும் வைரக் கற்கள் எனக் கூறலாம்.

இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம், ஃப்ரீடம். இந்த படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். இந்த படம் 1980 கால கட்டங்களில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக தப்பித்து அகதிகளாக குடியேறிய இலங்கைத் தமிழர்கள் குறித்த படமாக உருவாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த படம் உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் சசிகுமார் உடன், லிஜிமோல் ஜோஸ், போஸ் வெங்கட் , ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
படம் வரும் 10ஆம் தேதி அதாவது அடுத்த வாரம் வியாழன் அன்று வெளியாக உள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் செய்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 நிமிடங்கள் 24 நொடிகளுக்கு உள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
டிரைலர் எப்படி இருக்கு? : டிரைலரில் மட்டும் சசிகுமார் மொத்தம் மூன்று தோற்றங்களில் காட்சி அளிக்கிறார். இது மட்டுமல்லாமல், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்தும் இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களை விசாரணை என்ற பெயரில் எவ்வாறு எல்லாம் தமிழ்நாடு காவல் துறை கையாண்டது என்பது வரை பல விஷயங்களை டிரைலரில் கச்சிதமாக வெட்டிக் கொடுத்துள்ளது. டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனமும் பாராட்டும் கிடைத்துள்ளது.



Click it and Unblock the Notifications











