அப்படி மட்டும் ஆகிடாத சூரி.. மேடையிலேயே கருடன் நாயகனுக்கு அப்படியொரு அட்வைஸ் கொடுத்த சசிகுமார்!

சென்னை: சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளமாக உருவானவர் சசிகுமார். நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டிப் புலி என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சசிகுமார் ஒரு கட்டத்துக்கு மேல் அவர் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடாமல் சொதப்ப ஆரம்பித்தன.

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும் இது போன்ற ஏற்ற இறக்க தருணங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். பல ஆண்டுகள் கழித்து சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது.

Soori Sasikumar Garudan success meet


இந்நிலையில், இந்த ஆண்டு சூரி நடித்துள்ள கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்த நிலையில், அந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார் நடிகர் சூரிக்கு மேடையில் அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

பரோட்டா சூரி இல்லை: சூரியை இனிமேல் யாரும் பரோட்டா சூரி என அழைக்க மாட்டார்கள். கருடன் சூரி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவர் உழைப்பைக் கொட்டி மேலே வந்திருக்கிறார். அவரது வெற்றி நானே வெற்றி பெற்ற சந்தோசத்தை எனக்கு கொடுக்கிறது என நடிகர் சசிகுமார் கருடன் படத்தின் வெற்றி விழாவில் பேசினார்.

தோல்வி படங்களுக்குத்தான்: சமீபகாலமாக வெற்றி விழா என்பது படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் வைக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. அப்படி இல்லாமல் நிஜமாகவே நல்லா ஓடிய கருடன் படத்துக்கு வெற்றி விழா கொண்டாடுவது சந்தோசத்தை தருகிறது என சசிகுமார் பேசினார். மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி வருகின்றனர். சூரி தான் காரணம், இயக்குநர் துரை செந்தில் குமார் தான் காரணம், வில்லன் தான் காரணம், நான் ஒரு காரணம், கதை தான் காரணம் என பல காரணங்களை சொல்லி வருகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளர் குமார் தான் முக்கிய காரணம் எனக் கூறுவேன் என்றார். அவர் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றால் இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவுக்கும் எங்களுக்கும் கிடைத்திருக்காது என்றார்.

சூரிக்கு அட்வைஸ்: இனிமேல் சூரியை பரோட்டா சூரி என யாரும் அழைக்க மாட்டார்கள். அதை எல்லாம் அவர் அழித்து விட்டார். இப்போ சூரி கதையின் நாயகன் தான். கதையின் நாயகனாக இருக்கும் வரை சூரிக்கு வெற்றிதான். கதாநாயகனாக ஆகிடாதப்பா அப்போ தான் ரொம்ப கஷ்டம். ரொம்ப டெடிகேட் செய்து வொர்க் பண்ண சூரி ஜெயிச்சது நான் ஜெயிச்சதுக்கு சமமா நினைக்கிறேன் என சசிகுமார் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X