twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான பவானி தேவி.. அப்போவே அப்படி உதவி செய்த சசிக்குமார்.. என்னன்னு பாருங்க!

    |

    சென்னை: ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள வாள் சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் உதவி செய்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

    இன்ஸ்டாவில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய டிடி.. குவியும் வாழ்த்து! இன்ஸ்டாவில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய டிடி.. குவியும் வாழ்த்து!

    இந்தப்படத்தில் நடித்தும் இருந்தார் சசிக்குமார். தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரப்பாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, கொடி வீரன், அசுரவதம், பேட்ட, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இரண்டு படங்கள்

    இரண்டு படங்கள்

    தற்போது சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம, எம்ஜிஆர் மகன் ஆகிய இரண்டு படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    பவானி தேவிக்கு உதவி

    பவானி தேவிக்கு உதவி

    மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட சசிக்குமார் பல ஏழை எளிய மக்களுக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் உதவியிருக்கிறார். கொரோனா காலத்திலும் கூட பலருக்கு உதவி செய்கிறார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள வாள் சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு சசிக்குமார் உதவி செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

    இத்தாலி செல்ல உதவி

    இத்தாலி செல்ல உதவி

    அதாவது, 6 வருடங்களுக்கு முன்பு, இத்தாலியில் நடைபெற்ற வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி பவானிதேவி தவித்துள்ளார். அப்போது நடிகர் சசிக்குமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்து அவருக்கு உதவி செய்துள்ளார். இந்த தகவலை, கத்துக்குட்டி படத்தின் இயக்குநரான இரா சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

    ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

    ஒலிம்பிக்சில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமை தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவிக்கு (27 வயது) கிடைத்துள்ளது. ஹங்கேரியில் நடந்த உலக கோப்பை தொடரின் குழு கால் இறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்ற நிலையில், தரவரிசையில் மாறுதல் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் தனிநபர் சேபர் பிரிவில் பங்கேற்க பவானி தகுதி பெற்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    27 வயதான பவானி தேவி

    27 வயதான பவானி தேவி

    சென்னையை சேர்ந்த 27 வயதான பவானி தேவி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். ஹங்கேரியில் நடந்த உலக கோப்பை தொடரின் குழு கால் இறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்ற நிலையில், தரவரிசையில் மாறுதல் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் தனிநபர் சேபர் பிரிவில் பங்கேற்க பவானி தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார் பவானி தேவி.

    English summary
    Sasikumar helped fencer Bhavani devi six years before. Bhavani devi got selected for fencing in olympic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X