சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா… எப்போ ரிலீஸ் தெரியுமா ?

சென்னை : சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக படக்குழுவினர் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொம்பு வச்ச சிங்கம்டா

கொம்பு வச்ச சிங்கம்டா

சுந்தரபாண்டியன் வெற்றியைக் கொடுத்த கூட்டணி கொம்பு வச்ச சிங்கம்டா படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மடோனா செபாஸ்டின்

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடிகை மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடித்துள்ளார். சூரி, மறைந்த இயக்குனர் மகேந்திரன், ஹரிஷ் பெறடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள கொம்புவச்ச சிங்கமடா படத்திற்க்கு வி.டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்துள்ளார்.

நவம்பர் 26ம் தேதி

நவம்பர் 26ம் தேதி

இந்நிலையில் கொம்புவச்ச சிங்கமடா திரைப்படம் நவம்பர் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு சற்று முன் அறிவித்துள்ளது.

உடன்பிறப்பே

உடன்பிறப்பே

பாசமலர், கிழக்குச் சீமையிலே பாணியில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான உறவை தங்கையின் கணவர் பிரிப்பதால் வரும் துயரத்தைச் சொல்லும் ஒரு திரைப்படம் தான் இந்த உடன்பிறப்பே. இப்படத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இத்திரைப்படம் அமேசானில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

எம்.ஜி.ஆர். மகன். ஓடிடியில்

எம்.ஜி.ஆர். மகன். ஓடிடியில்

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர். மகன். வருகிற தீபாவளி நவ. 4 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாக அ அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவச படங்கள்

கைவச படங்கள்

சகிகுமார் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் , நா நா ஆகிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் சில படங்களின் பணி முழுமையாக முடிவடைந்துவிட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X