'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் இவங்க நடிக்கிறாங்களா? அவசரமாக மறுக்கிறார் தயாரிப்பாளர்!

By

சென்னை: அய்யப்பனும் கோஷியும் பட தமிழ் ரீமேக்கில் நடிப்பவர்கள் முடிவாகவில்லை என்று அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாள சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.

சச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

ஈகோ மோதல்

ஈகோ மோதல்

ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிகாரப் பின்னணி ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் இந்தப் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள்.

மதுபாட்டில்கள்

மதுபாட்டில்கள்

அட்டப்பாடி வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்க தடை இருக்கிறது. அதை மீறி, அங்கிருந்து மதுபாட்டில்களும் ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் பரிசோதனையில் சப் இன்ஸ்பெக்டர் பிஜூ மேனனிடன் சிக்கிக் கொள்கிறார் பிருத்விராஜ். முன்னாள் ராணுவ வீரரான பிருத்வி, போலீஸை அடிக்கப் பாய, பிஜூவுக்கும் ஈகோ வெளிப்படுகிறது. பிறகு அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லும் படம் இது.

கதிரேசன்

கதிரேசன்

இதில் இடம்பெற்றிருந்த, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு என்ற பாடல் பட்டி தொட்டிங்கும் பரவல் ஹிட். இந்தப் பாடலை நஞ்சம்மா என்ற பழங்குடியினப் பெண் பாடியிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதில் பிருத்விராஜ் கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில், சரத்குமாரும் சசிகுமாரும் நடிக்க இருப்பதாகவும் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி தயாரிப்பாளர் கதிரேசனிடம் கேட்டபோது, இன்னும் யாரிடமும் பேசவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பதும் முடிவாகவில்லை. இது தவறானத் தகவல் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X