சசிகுமாரை இயக்கும் கழுகு பட இயக்குனர்... எந்த மாதிரி கதை தெரியுமா!

சென்னை : நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இப்பொழுது பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்துள்ளார்.

பகைவனுக்கு அருள்வாய், எம்ஜிஆர் மகன்,ராஜவம்சம் , கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்கள் சசிகுமாருக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இந்தநிலையில் கழுகு பட இயக்குனருடன் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ப்ராண்ட் இவர் மீது உள்ளது

ப்ராண்ட் இவர் மீது உள்ளது

முதலில் இயக்குனராக வெற்றிகளை பதித்த சசிகுமார் இப்பொழுது நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்க இவரின் திரைப்படங்களை காணவே ஒரு தனி கூட்டமே உள்ளது என சொல்லலாம் அந்த அளவிற்கு இவர் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் கட்டாயமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கும் என ஒரு ப்ராண்ட் இவர் மீது உள்ளது.

பெரும்பாலும் நட்பை மையப்படுத்தி

பெரும்பாலும் நட்பை மையப்படுத்தி

குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து ஈசன் என்ற மற்றொரு படத்தையும் இயக்கியிருந்தார். இவரது படங்கள் பெரும்பாலும் நட்பை மையப்படுத்தி இருக்க இது இவரது படங்களின் தனித்துவமாக மாறிப்போனது.

கமர்சியல் ஹிட் இயக்குனராக

கமர்சியல் ஹிட் இயக்குனராக

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் கமர்சியல் ஹிட் இயக்குனராக உள்ள இயக்குனர் பொன்ராம் இப்பொழுது சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கி உள்ளார். இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் என ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது.

 சஸ்பென்ஸ் த்ரில்லர்

சஸ்பென்ஸ் த்ரில்லர்

கொம்பு வச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம்,முந்தானை முடிச்சு 2, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் சசிகுமார் இப்பொழுது கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிகிறது. இதுவரை கலகலப்பான காமெடி மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வந்த சசிகுமார் இதில் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் நடிக்க உள்ளாராம். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X