”பேட்ட”யில் இணைந்த கூழாங்கல் கண்ணழகன்! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!
பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார்
Recommended Video

சென்னை: பேட்ட திரைப்படத்தில் தற்போது நடிகர் சசிகுமாரும் இணைந்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் பேட்ட. மல்டி ஸ்டார் படமாக தயாராகிவருகிறது.

இப்படத்தில், த்ரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் உள்ளது.
தற்போது இப்படத்தில் நடிகர் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நடிகர் சசிகுமார் தற்போது கொம்பு வச்ச சிங்கம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சசிகுமார் கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர். ரஜினிகாந்தை வர்ணித்து ஓபனிங் பாடல்கள் இருப்பது போலவே சுந்தரபாண்டியன் படப் பாடலில் "கூழாங்கல்லு கண்ணழகன்" எனப் போற்றப்பட்டவர் நடிகர் சசிகுமார். தற்போது ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்துள்ளார்.
சசிகுமார் இப்படத்தில் நடிக்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அந்தவகையில் இப்போது ரஜினியுடன் சசிகுமார் படப்பிடிப்பில் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான முறுக்கு மீசை கெட்டப்பில் ரஜினி இருக்கிறார். ஆனால் வேட்டி சட்டை இல்லை. பேண்ட் ஷர்ட் என விண்டேஜ் லுக்கில் இருக்கிறார். அவருக்கு அருகில் சசிகுமார் அவருக்கே உரிய டிரேட் மார்க் தாடியுடன் இருக்கிறார். இருவரும் நடந்துவரும்போது க்ளிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் த்ரிஷாவின் அண்ணனாக பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சசிகுமார் தற்போது கொம்பு வச்ச சிங்கம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, திரு ஒளிப்பதிவு செய்கிறார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











